டிசம்பர் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது ரஞ்சி டிராபி 2022-23!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 10, 2022 & 16:38 [IST]

Share

Ranji Trophy 2022-23 : இந்தியாவில் நடக்கும் உள்நாட்டுத் தொடர்களில் முக்கிய முதல் தர கிரிக்கெட் தொடராகக் கருதப்படும்  ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் 2022-2023 டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்க உள்ளது.

பி.சி.சி.ஐ கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு வருடமும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் சார்ந்த 38-அணிகள் இந்த தொடரில் பங்கேற்கும்.

இந்த தொடரில் உள்ள போட்டிகள் எல்லாம் பல்வேறு மைதானங்களை மையமாகக் கொண்டு இந்தியா முழுவதிலும் நடத்தப்படும். இதுவரை ரஞ்சி கோப்பை தொடரில் அதிகமாக 41-முறை மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ,மேலும் கடந்த ஆண்டு (2021-2022) நடந்த ரஞ்சி கோப்பை தொடரில் மத்திய பிரதேஷ் அணி மும்பை அணியை  இறுதிப் போட்டியை  தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான (2022-2023) ரஞ்சி கோப்பை தொடரின் அட்டவணையை பி.சி.சி.ஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த தொடரின் போட்டிகள் டிசம்பர் 13 2022 ஆம் தேதி முதல் பிப்ரவரி 16 2023

தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் உள்ள  38 அணிகள் ஐந்து பிரிவுகளாகப் பிரிந்து பிரிவு -எ,பிரிவு -பி ,பிரிவு-சி மற்றும் பிரிவு-டி களில்  தலா 8-அணிகளும் இறுதியாக ப்ளட் குரூப் என்ற பிரிவில் 6-அணிகளும்  பங்கேற்க உள்ளன.

இந்த தொடரில் இடம் பெற்றுள்ள  அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்குத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஞ்சி கோப்பையில் (2022-2023) இடம்பெற்றுள்ள அணிகளின் பிரிவுகள் குறித்த விவரம்:

எலீட் குரூப்-எ 

எலீட் குரூப்-பி 

எலீட் குரூப்-சி 

எலீட் குரூப்-டி 

ப்ளேட் குரூப்

ஹரியானா

ஆந்திரா

கேரளா

பஞ்சாப்

பீகார்

உத்தரபிரதேசம்

மும்பை

ஜார்கண்ட்

சண்டிகர்

அருணாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசம்

அசாம்

கோவா

ஜம்மு காஷ்மீர்

சிக்கிம்

உத்தரகாண்ட்

சௌராஷ்டிரா

ராஜஸ்தான்

மத்திய பிரதேசம்

மணிப்பூர்

நாகாலாந்து

ஹைதராபாத்

புதுச்சேரி

திரிபுரா

மிசோரம்

வங்காளம்

தமிழ்நாடு

சத்தீஸ்கர்

குஜராத்

மேகாலயா

பரோடா

மகாராஷ்டிரா

கர்நாடகா

விதர்பா

 

ஒடிசா

டெல்லி

சர்வீசஸ் 

ரயில்வே

 

இந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பங்களித்தால் இந்திய கிரிக்கெட் அணியில் கண்டிப்பாக இடம் பெறலாம்,என்பதை நன்கு உணர்ந்த கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக ஒவ்வொரு போட்டியையும் எதிர்கொண்டு தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.