Ranji Trophy 2022-23 : ரஹானே இரட்டை சதம்.. ஹைதராபாத்துக்கு எதிராக வலுவான நிலையில் மும்பை!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 21, 2022 & 12:16 [IST]

Share

Ranji Trophy 2022-23 : அஜிங்க்யா ரஹானே, பிகேசியில் உள்ள ஷரத் பவார் கிரிக்கெட் அகாடமியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி 2022-23 போட்டியில் மும்பைக்காக இரட்டை சதம் அடித்தார்.

மும்பை அணி 32.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டத்தில் ரஹானே பேட்டிங் செய்யத் தொடங்கினார். அவர் 195 பந்துகளில் 27 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 162 ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்தார்.

மேலும் ரஹானே ஏற்கனவே முதல் நாளில் தனது சதத்தை எட்டியிருந்தார்.இந்நிலையில், ஷஷாங்க் ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்த பிறகு, ரஹானே மற்றும் சர்ஃபராஸ் கான் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 196 ரன்களை சேர்த்து மும்பையை ஒரு வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர்.

ரஹானே 261 பந்துகளில் 26 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 204 ரன்கள் எடுத்தார். அவர் 78.16 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். ரஹானே அவுட்டாகும் போது, மும்பை அணி 110.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 578 ரன் எடுத்திருந்தது.

இதற்கிடையில், ரஹானே, இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் தனது என்ட்ரிக்காக காத்துக்கொண்டுள்ளார். முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அவர் டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்தார்.

அவர் இலங்கை, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷுக்கு எதிராக விளையாடவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து ஸ்கோரை அடித்தால், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் தேர்வு செய்யப்படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

82 டெஸ்ட் போட்டிகளில், ரஹானே 12 சதங்கள் மற்றும் 25 அரை சதங்களுடன் 38.52 சராசரியில் 4931 ரன்கள் எடுத்துள்ளார்.