ஐ.பி.எல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங்-11 வெளியானது ..?? சாம்சன் திறமையை காட்டுவர் ரசிகர்கள் நம்பிக்கை..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 27, 2022 & 18:20 [IST]

Share

ராஜஸ்தான் ராயல்ஸ்  நடந்து முடிந்த மினி ஏலத்தில் தங்கள் அணியின் ஆல்ரவுண்டர்  இடத்திற்கு மிகவும் பொருத்தமான வகையில்  மேற்கிந்திய தீவுகள் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை போட்டிபோட்டு 5.75 கோடிக்கு வாங்கியது.

ஜேசன் ஹோல்டரை வாங்கியதன் மூலம் அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங்  ஆர்டரை மிகவும் பலப்படுத்தியுள்ளது ராஜஸ்தான் அணி நிர்வாகம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஐ.பி.எல் தொடரில் இறுதி போட்டி வரை சென்று தோல்வியடைந்தது, எனவே அணியில் சிறந்த பங்களிப்பை அளித்த வீரர்களை அப்படியே தக்கவைத்து சில வீரர்களை விடுவித்தது. அந்த வகையில் அணியின் பௌலிங்கை பலப்படுத்தும் நோக்கில் அசத்தல் ஸ்பின்னர்கள் ஆடம் ஜம்பா மற்றும் முருகன் அஸ்வினை வாங்கியது. 

இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜோ ரூட்டையும்  சில இந்திய வீரர்களை ஏலத்தில் எடுத்தது,அணியில் ஏற்கனவே முன்னனி வீரர்கள் பலர் உள்ள நிலையில் அவர்களுக்கு பேக்கப்பாக இந்த வீரர்கள் செயல் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கண்டிப்பாக இந்த முறையும் தனது அணியை சிறப்பாக வழிநடத்தி போட்டிகளில் வெற்றியை பெற்று சாம்பியன் பட்டத்தையும் வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருக்கும் முன்னனி வீரர்களை வைத்து உருவான தோராயமான பிளேயிங்-11 வெளியாகி கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தோராயமான பிளேயிங்-11 : ஜோஸ் பட்லர் ,யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

விக்கெட்கீப்பர்கள் :  சஞ்சு சாம்சன்(கேப்டன்), ஜோஸ் பட்லர் (இங்கி), துருவ் ஜூரல், குணால் ரத்தோர், டோனோவன் ஃபெரீரா (தென்.ஆ).

பேட்ஸ்மேன்கள்  : ஷிம்ரோன் ஹெட்மியர் (மேற்.தீவுகள்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்,தேவ்தத் படிக்கல்,ஜோ ரூட் (இங்கி).

ஆல்ரவுண்டர்கள் : ரவிச்சந்திரன் அஷ்வின், அப்துல் பி ஏ, ஆகாஷ் வஷிஷ்ட், ரியான் பராக்,ஜேசன் ஹோல்டர் (மேற்.தீவுகள்).

பௌலர்கள் : டிரென்ட் போல்ட் (நியூசி), KC கரியப்பா, யுஸ்வேந்திர சாஹல், ஓபேட் மெக்காய் (மேற்.தீவுகள்), பிரசித் கிருஷ்ணா, நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், முருகன் அஷ்வின், ஆடம் ஜம்பா (ஆஸி), கே.எம்.ஆசிப்.