கோலி, ரோஹித் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் டி20 தொடர் ஓய்விற்கு..! முற்றுப்புள்ளி வைத்தார் டிராவிட்..!

இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது, இதில் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் போன்ற முன்னணி வீரர்கள் டி20 உலக கோப்பை பிறகு டி20 அணியில் இடம் பெறாதது பெரிய சர்ச்சையாக பேசப்பட்டு வந்தது இது குறித்து அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியது, இந்த ஆண்டு இறுதியில் நடக்க விருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றும் நோக்கில் ஒருநாள் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்து தீவிரமாக இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.இதற்கு இடையில் வரும் சில டி20 போட்டிகளில் இளம் இந்திய வீரர்கள் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது.
இதனால் அணியின் முன்னணி வீரர்கள் ரோஹித் ,கோலி, ராகுல் போன்ற வீரர்களுக்கு டி20 அணியில் இனி இடமில்லை என்று அர்த்தம் ஆகாது,அவர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று டிராவிட் கூறினார். அடுத்து இந்திய அணி பங்கேற்க இருக்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கோலி,ரோஹித் போன்ற வீரர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணிக்கு முக்கியமான போட்டிகள் என்றால் ஒருநாள் உலக கோப்பை தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தான் எனவே அதற்கு முன்னுரிமை அளித்து அணியின் முன்னணி வீரர்கள் அந்த தொடர்களில் மட்டும் விளையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
அந்தந்த காலத்திற்கு ஏற்ப கிரிக்கெட் தொடர்களில் முன்னுரிமை மாறும் அதேபோல் தொடர்களில் முன்னணி வீரர்கள் பங்கேற்பு உள்ளிட்டவை மாறும் என்பது டிராவிட் அளித்த பேட்டியின் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது.
இதனால் பல நாட்களாக இணையத்தில் எழுந்து பேசு பொருளாக இருந்து வந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க பட்டுள்ளது என்று ரசிகர்கள் பலர் தங்களின் கருத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.