என்ன மனுஷன் சார் நீங்க.. எதிரணி வீரருக்கும் பயிற்சி கொடுத்த ராகுல் டிராவிட்.. வைரலாகும் வீடியோ!!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் போட்டிக்கு முன்னதாக ராகுல் டிராவிட் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் நெட் பிராக்டீஸ் செய்தபோது மிகவும் தீவிரமாக உரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. 35 வயதான அவர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்திற்காக முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 28 மற்றும் 23 ரன்களை எடுத்தார்.
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரிலும் ரஹீம் மிகவும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட அந்த ஒருநாள் தொடரில் முறையே 18, 12 மற்றும் 7 ரன்கள் மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க முஷ்பிகுருக்கு கடைசி வாய்ப்பு உள்ளது. இதனால் எந்த வழியிலும் வரும் உதவியை பெற அவர் ஆர்வமாக இருந்ததாகவும், அதனால் தான் இந்திய அணியின் பயிற்சியாளரிடம் திறனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை பெற்றதாகக் கூறப்படுகிறது.
நேற்று மிர்பூரில் நடந்த பயிற்சி அமர்வின் போது ரஹீம் ராகுல் டிராவிட்டுடன் நீண்ட நேரம் உரையாடினார். டிராவிட் பெரும்பாலும் பேசுவதையும், பந்துவீச்சாளர்களை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அவருக்கு அறிவுரை வழங்க பல கை சைகைகளைப் பயன்படுத்துவதையும் காண முடிந்தது. பங்களாதேஷ் வீரரின் பாராட்டுக்கு அடையாளமாக வீடியோவின் முடிவில் இருவரும் தழுவிக்கொண்டனர்.
Mushfiqur Rahim spotted with indian coach Rahul Dravid during the practice session. Learning from the best! ?
— Mushfiqur Rahim Fan Club (@mushfiqurfc) December 20, 2022
Video courtesy : @BDCricTime#RahulDravid #BANvIND pic.twitter.com/8ulnurZ7j2
எதிராணியினருக்கும் பேட்டிங் ஸ்கில் குறித்து இந்திய பயிற்சியாளர் ஆலோசனை கூறும் இந்த வீடியோ இணையத்தில் ஹிட் அடித்து, பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அதே சமயம், எதிரணிக்கு சொல்லிக்கொடுக்கிறேன் என போய், கடைசியில் அது இந்திய அணிக்கு ஆபத்தாய் முடிந்துவிட போகிறது என சிலர் எச்சரிக்கவும் தவறவில்லை.