ஆசிய கோப்பை தொடர் விவகாரத்தில் அஸ்வின் கருத்து..! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பதிலடி..!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் ஆசிய கோப்பை 2023 தொடர் விவகாரத்தில் தொடர்ந்து பேசி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தனது கருத்தின் மூலம் பதிலடி கொடுத்து அசத்தியுள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் செல்ல இந்திய அணிக்கு அனுமதி அளிக்காததால் , இந்த தொடரை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்திற்கு மாற்றலாம் என்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா எடுத்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் விமர்சனம் செய்து சில கருத்துக்களை பதிவு செய்தது.
அதாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது இந்தியா பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள வில்லை என்றால், இந்த ஆண்டு இறுதியில் இந்திய மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் பங்கேற்காமல் பாகிஸ்தான் அணி புறக்கணிக்கும் என்று கூறினார்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த மிரட்டல் கருத்துக்கு இந்திய அணியின் முன்னணி பவுலர் அஸ்வின் ஒரு பதிவின் மூலம் தக்க பதிலடியை அளித்துள்ளார், அதில் பேசிய அஸ்வின் இந்தியா ஆசிய கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் பயணிக்காது என்று தனது கருத்தை தெளிவாக கூறி விட்டது, அதன் பிறகு தொடரை பொதுவான இடத்திற்கு மாற்றம் செய்யாமல் பதிலுக்கு உலகக்கோப்பை தொடரை புறக்கணிப்பதாக கூறுவது சரியில்லை.
அதன்பின் தொடர்ந்து பேசிய அஸ்வின் அதேபோல் தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பல ஆண்டுகளாக பலமுறை கூறியுள்ளது ஆனால் அப்படி செய்தது இல்லை, தேவையில்லாத மிரட்டல்களை விடுவதையே வழக்கமாக வைத்துள்ளது என்று கூறினார், மேலும் ஆசிய கோப்பை தொடரை இலங்கையில் நடத்தலாம் அது உலக கோப்பை தொடருக்கு முன் புதிய அனுபவமாக இருக்கும் என்றும் கூறினார்.