ஐ.பி.எல் 2023: பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலமான பிளேயிங்-11 வெளியானது ..?? புதிய கேப்டன் கப்பை பெற்று தருவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு .!

ஐ.பி.எல் மினி ஏலத்தில் மிகவும் அதிக தொகை கொண்ட அணியாக களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் இங்கிலாந்தின் அசத்தல் ஆல்ரவுண்டர் சாம் கர்ரானை 18.5 கோடிக்கு வாங்கி புதிய ரெக்கார்டை படைத்தது.பஞ்சாப் அணியுடன் எந்த அணியும் போட்டிபோட முடியவில்லை என்பது தான் உண்மை.
சாம் கர்ரான் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக அனைத்துப் போட்டிகளில் தனது திறனை வெளிப்படுத்தியதால்,அவரை வாங்க அனைத்து அணிகளும் போட்டி போட்டாதால் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி பல தொடர்களில் சிறப்பாக விளையாடியும் இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை,இதனை சரி செய்யும் வகையில் புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் வரும் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் அதிரடியான தொடக்க வீரர்கள், பலமான மிடில் ஆர்டர், திறமையான ஆல்ரவுண்டர்கள்,மிரட்டலான பௌலிங் யூனிட் என ஒரு அசத்தல் அணியை உருவாக்கியுள்ளது,எனவே கண்டிப்பாக இந்த முறை தங்களின் முதல் சாம்பியன் வென்றே தீரும் என்பதில் ஐயமில்லை.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தோராயமான பிளேயிங்-11 : ஜானி பேர்ஸ்டோவ் ,ஷிகர் தவான் (கேப்டன்), பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், எம். ஷாருக் கான், சாம் கர்ரன் , ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் பிரார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:
விக்கெட்கீப்பர்கள் : ஜானி பேர்ஸ்டோவ் (இங்கி), பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா.
பேட்ஸ்மேன்கள் : ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே (இலங்கை), ஷாருக் கான், ஹர்பிரீத் பாட்டியா.
ஆல்ரவுண்டர்கள் : ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன் (இங்கி), சாம் கர்ரான் (இங்கி), சிக்கந்தர் ராசா (ஜிம்பாபே), ஷிவம் சிங்,மோஹித் ரதி,அதர்வா டைடே,பால்தேஜ் சிங்.
பௌலர்கள் : அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர், நாதன் எல்லிஸ் (ஆஸி ), ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா (தென்.ஆ), வித்வத் கவேரப்பா,ராஜ் பாவா.