பாகிஸ்தான் சூப்பர் லீக் 2023 பங்கேற்கும் அணிகள்,போட்டி முறை, அட்டவணை குறித்த முழு விவரம் வெளியானது..??

பாகிஸ்தான் உள்நாட்டு தொடர்களில் முக்கிய தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் வரும் பிப்ரவரி மாதத்தில் தனது 8-வது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளது.அந்த தொடரில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள், போட்டிகளின் அட்டவணை என மொத்த தகவல்களும் வெளியானது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் 7-வது சீசனில் இறுதி போட்டியில் லாகூர் குவாலண்டர்ஸ் அணி முல்தான் சுல்தான்ஸ் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் 2023 போட்டி முறை :
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளது, தொடரில் உள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் இரண்டு முறை விளையாடும். இந்த போட்டிகள் முடிவில் முதல் 4-இடங்களில் இருக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும், மொத்தமாக இந்த தொடரில் 34-போட்டிகள் நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் அட்டவணை குறித்த அப்டேட் :
பி.எஸ்.எல் தொடரின் அதிகாரப்பூர்வ அட்டவணை ஜனவரி இறுதியில் அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது,அதன் பின்னர் அட்டவணை குறித்த விவரங்களை இங்கு அப்டேட் செய்யப்படும். இந்த தொடரின் போட்டிகள் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கி மார்ச் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பி.எஸ்.எல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் விவரம்:
1) இஸ்லாமாபாத் யுனைடெட்
2) கராச்சி கிங்ஸ்
3) லாகூர் குவாலண்டர்ஸ்
4) முல்தான் சுல்தான்ஸ்
5) பெஷாவர் சல்மி
6) குவெட்டா கிளாடியேட்டர்ஸ்
இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வீரர்கள் : ஷதாப் கான் (கேப்டன்), ஆசிப் அலி, முகமது வாசிம் ஜூனியர், கொலின் முன்ரோ, அசம் கான், ஃபஹீம் அஷ்ரப், ஹசன் அலி, அப்ரார் அகமது, பால் ஸ்டிர்லிங், அலெக்ஸ் ஹேல்ஸ், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, மொயீன் அலி, சோஹைப் மக்சூத் ஜமீர், ஹசன் நவாஸ், முபாசிர் கான்.
கராச்சி கிங்ஸ் அணி வீரர்கள் : இமாத் வாசிம்(கேப்டன்), ஹைதர் அலி, முகமது அமீர், மிர் ஹம்சா, சோயிப் மாலிக், அமீர் யாமின், ஷர்ஜீல் கான், ஜேம்ஸ் புல்லர், காசிம் அக்ரம், மேத்யூ வேட், இம்ரான் தாஹிர், ஜேம்ஸ் வின்ஸ், இர்பான் கான் நியாசி, ஆண்ட்ரூ டை, தயாப் தாஹிர், முகமது அக்லாக், தப்ரைஸ் ஷம்சி, முகமது உமர்.
லாகூர் குவாலண்டர்ஸ் அணி வீரர்கள் : ஷஹீன் ஷா அப்ரிடி (கேப்டன்), ரஷித் கான், ஹாரிஸ் ரவுஃப், ஹாரி புரூக்,டேவிட் வைஸ், அப்துல்லா ஷபிக், சிக்கந்தர் ராசா, கம்ரான் குலாம், ஜமான் கான், ஃபகார் ஜமான், ஹுசைன் தலாத், ஜோர்டான் காக்ஸ், லியாம் டாசன், தில்பர் ஹுசைன், மிர்சா தாஹிர் பெய்க், அகமது தன்லால், ஷவாய்ஸ் இர்ஃபான், ஜலத் கான்.
முல்தான் சுல்தான்ஸ் அணி வீரர்கள் : முகமது ரிஸ்வான்(கேப்டன்), குஷ்தில் ஷா, டிம் டேவிட், ரிலீ ரோசோவ், ஷான் மசூத், ஷாநவாஸ் தஹானி, உசாமா மிர், அப்பாஸ் அப்ரிடி, இஹ்சானுல்லா, டேவிட் மில்லர், ஜோஷ் லிட்டில், அகேல் ஹொசைன், அடில் ரஷித், உஸ்மான் கான், அன்வர் குல், முகமது சர்வார், அராபத் மின்ஹாஸ்.
பெஷாவர் சல்மி அணி வீரர்கள் : பாபர் அசாம் (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், சல்மான் இர்ஷாத், வஹாப் ரியாஸ், முகமது ஹாரிஸ், அமீர் ஜமால், ரோவ்மன் பவல், டாம்-கோஹ்லர் காட்மோர், பானுகா ராஜபக்சே, டேனிஷ் அஜீஸ், முஜீப் உர் ரஹ்மான், அர்ஷத் இக்பால், சைம் அயூப், சுமான் அயூப், உஸ்மான் , ஹசீப் உல்லா, ஜிம்மி நீஷாம்.
குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி வீரர்கள் : சர்பராஸ் அகமது(கேப்டன்), முகமது நவாஸ், இப்திகார் அகமது, ஜேசன் ராய், முகமது ஹஸ்னைன், அஹ்சன் அலி, நவீன் உல் ஹக், உமர் அக்மல், வில் ஸ்மீட், வனிந்து ஹசரங்கா, நசீம் ஷா, ஒடியன் ஸ்மித், அய்மல் கான், உமைத் ஆசிப், முஹம்மது ஜாஹித் பங்கல்சாய், மார்ட்டின் குப்தில், ஒமைர் பின் யூசுப்