ஐபிஎல் 2023 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பிரசித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்..!!

இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடர்களின் ஒன்றான ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி பௌலர் பிரசித் கிருஷ்ணா 2023 தொடரில் இருந்து விலகுவதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பாக பவுலிங் செய்து அசத்திய பிரசித் கிருஷ்ணா, அதன்பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டு முன்னணி பவுலராக சிறப்பான பங்களிப்பை அளித்து வந்தார், இதனை தொடர்ந்து 2023 காண ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் பிரசித் கிருஷ்ணா வை 10 கோடிக்கு அணியில் தக்கவைத்து (ரீடைன்) கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசித் கிருஷ்ணா கடைசியாக 2022 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் விளையாடினார், அவருக்கு தொடர்ச்சியாக இருந்த இடுப்பு அழுத்த எலும்பு முறிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு பிறகு நீண்ட நாட்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக பவுலிங் செய்த 26 வயது இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா 17 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றினர்,மேலும் 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த 2022 தொடரில் தான் ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிரசித் கிருஷ்ணா வுக்கு பதில் வேறு ஒரு வீரரை விரைவில் ராஜஸ்தான் அணி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மார்ச் 31 ஆம் தேதி ஆரம்பிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது, மேலும் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும்