பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதும் அதிரடி போட்டிக்கான டாஸ் அப்டேட்..!! | pbks vs gt 2023 match toss update

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோத உள்ளார்கள், இந்த போட்டிக்கான டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் குறித்த விவரங்கள் வெளியானது.
குஜ்ராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று வருகிறது.அதே சமயத்தில் புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கி விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்று தான் வருகிறது.
ஐபிஎல் அரங்கில் கடைசியாக விளையாடிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் தோல்வியை தழுவி உள்ள நிலையில், கட்டாயம் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று வெற்றி பயணத்தை தொடர முழு வீச்சில் செயல்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், ஷுப்மான் கில் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளார்கள். அதே சமயத்தில் பஞ்சாப் அணியில் ஷிகர் தவான், சாம் குரான், அர்ஷ்தீப் சிங் போன்ற அசத்தல் வீரர்கள் உள்ளதால் ஒரு அதிரடியான போட்டி அரங்கேறும் என்பதில் ஐயமில்லை.
தற்போதைய நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய ஷிகர் தவான் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன் : பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான்(கேப்டன்), மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் ஷர்மா(வி.கீ), சாம் குரான், ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங்
குஜ்ராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன் : விருத்திமான் சாஹா(வி.கீ), சுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன் ), டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்.