T20 World Cup 2022: நியூசிலாந்து அணி வீரர்கள் இவங்க தான்… பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு…!

T20 World Cup 2022 : ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்த 2022 ஆம் ஆண்டின் டி20 உலகக் கோப்பைக்கான அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்து வருகிறது. இதில் நியூசிலாந்து அணியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் பற்றிக் காண்போம்.
முழு அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சௌத்தி, இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாச்லன் பெர்குசன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், டிரெண்ட் போல்ட், ஃபின் ஆலன்.
இந்த அணி வீரர்களில் தொடக்க ஆட்டக்காரரான மார்டின் கப்தில் டி20 உலகக் கோப்பையில் 7 ஆவது முறையாக இடம் பெற்றுள்ளார்.
மேலும், வெலிங்டன் பயர்பேர்ட்ஸ் என அழைக்கப்படும் பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல் இருவரும் இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளனர். இதில், டேவன் கானே விக்கெட் கீப்பராக இடம் பிடித்துள்ளார்.
இந்த டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுடன் நியூஸிலாந்து அணியின் உலகக் கோப்பை அணி விளையாட உள்ளது. இவர்களது முதல் ஆட்டமான அக்டோபர் 22 ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியைச் சந்திக்கிறது.