அபுதாபி டி-10 லீக்: மோர்கன் அடியில் சிதறிய நார்தேர்ன் வாரியர்ஸ்…

Representative Image. Representative Image.

By Editorial Desk Published: December 01, 2022 & 17:05 [IST]

Share

அபுதாபி டி-10 லீக்கில் 22-வது போட்டியில் நார்தேர்ன் வாரியர்ஸ் மற்றும் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள்  ஷேக் சயீத் மைதானத்தில் விளையாடினார்கள். இந்த போட்டியில் டோஸ் வென்ற நார்தேர்ன் வாரியர்ஸ் அணியின் கேப்டன் ரோவ்மேன் பவல் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். மிரட்டலாக விளையாடிய நார்தேர்ன் வாரியர்ஸ் அணியினர் 10-ஓவர்களின் முடிவில் 143 ரன்களை அடித்து விளாசினார். நார்தேர்ன் வாரியர்ஸ் அணியின் சார்பில் கேப்டன் ரோவ்மேன் பவல் 19 பந்துகளில் 54 ரன்களை அடித்தார், அதில்  6-சிக்ஸர்கள் மற்றும்  2-பௌண்டரிகள் அடங்கும்.

இரண்டாவது இன்னிங்சில்  பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆண்ட்ரே பிளெட்சர் மற்றும் பால் ஸ்டிர்லிங் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்தாக  களமிறங்கிய பேட்ஸ்மேன் இயோன் மோர்கன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 பந்துகளில் 87* ரன்களை குவித்தார், அதில் 3-சிக்ஸர்களும் 12-பௌண்டரிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 10-ஓவர்கள் முடிவில் 144 ரன்களை அடித்து நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது.

நார்தேர்ன் வாரியர்ஸ் அணி சார்பாக முகமது இர்பான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதைச் சிறப்பாக விளையாடிய இயோன் மோர்கன் தட்டிச் சென்றார். மேலும் இந்த வெற்றியின் மூலம்  நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.