ஐபிஎல் 2023 : ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் புதிய விதி பிசிசிஐ அதிரடி..!! வீரர்கள் வரவேற்பு..!!

இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அமலில் இருக்கும் புதிய விதியை அடுத்து நடைபெற இருக்கும் ஆடவர் பிரீமியர் லீக் தொடரில் அறிமுக படுத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் முதல் முறையாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் அமலாகி உள்ள புதிய விதி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த விதியை ஆடவர் பிரீமியர் லீக் தொடரிலும் அமல்படுத்த பிசிசிஐ தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 3.1.1 என்ற விதியின் மூலம் நடுவர் அளிக்கும் நோ பால் மற்றும் வைட் பால் போன்ற அனைத்து முடிவுகளையும் களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அல்லது கேப்டன் (ரிவியூ) மறுபரிசீலனை செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதியின் மூலம் நடுவர் அளிக்கும் முடிவு சரியானதா..?? என்பது குறித்து வெளிப்படை தன்மையை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் அடுத்து நடைபெற உள்ள ஆடவர் ஐபிஎல் தொடரில், இந்த 3.1.1 என்ற புதிய விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதன் மூலம் போட்டியில் முக்கியமான தருணத்தில் வழங்கப்படும் நோ பால் மற்றும் வைட் பால் போன்ற நடுவர்களின் முடிவில் தெளிவு இருக்கும் என்பதால் கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் அடுத்து ஆரம்பமாக உள்ள ஆடவர் ஐபிஎல் தொடருக்காக மிகுந்த ஆர்வத்தில் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.