நேபால் டி-20 தொடரில் விக்கெட் கீப்பர் செய்த சம்பவம் ..! மகேந்திர சிங் தோனியை கண்முன் நிறுத்தியது..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: December 28, 2022 & 14:00 [IST]

Share

இந்திய அணியின் முன்னால் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்களில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும்,அவரின் சாதனைகள்,திறமையான ஆட்டம் ஆகியவற்றின் மூலம் இன்றும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக தான் உள்ளார்.

நேபால் டி-20 தொடரில் நடந்த போட்டி ஒன்றில் பிரத்நகர் சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட்கீப்பர் அர்ஜுன் சவுத் அசத்தலாக இரண்டு ரன் அவுட்களை செய்துள்ளார்,அதனை பார்த்த பலரும் இவரது செயல் இந்திய அணியின் முன்னால் கிரிக்கெட் வீரர் தோனியை கண்முன் பார்த்ததை போல் உள்ளதாக கூறியுள்ளார்.

பிரத்நகர் மற்றும் ஜனக்பூர் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் துரிதமாக செயல்பட்ட பிரத்நகர் சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட்கீப்பர் அர்ஜுன் சவுத் யாரும் எதிர்பாராத வகையில் மிரட்டலான ரன்அவுட்டை செய்துள்ளார்.

அதன்பின்  ஸ்டம்ப்பை பார்க்காமல் மேலும் ஒரு அசத்தல் ரன் அவுட்டை செய்துள்ளார்,இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பலரும் அதை பகிர்ந்து தோனி வழியை பின்பற்றும் வீரர்கள்,என்றும்   விக்கெட் கீப்பிங் கிங்  தோனி தான் என்றவாறு பகிர்ந்து வருகிறார்கள்.

நேபால்  டி-20 தொடரில்  ஆறு அணிகள் விளையாடி வருகின்றன , இந்த தொடர்  டிசம்பர் 24-ஆம்  தொடங்கி ஜனவரி 11-ஆம் தேதி  அன்று முடிவடைகிறது.இதில் மொத்தமாக  34 போட்டிகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தொடரில் இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் லும்பினி ஆல் ஸ்டார்ஸ் அணியும் கடைசி இடத்தில் பொக்ரா அவென்ஜர்ஸ் அணியும்  உள்ளது.

எம்.எஸ்.தோனி ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும்,அதன்பிறகு விஸ்வருபம் எடுத்த அவர் செய்யாத சாதனைகளே இல்லை என்பது தான் உண்மை.இன்றைய அளவிலும் அவரின் தாக்கம் கிரிக்கெட் உலகில் உள்ளது அது என்றும் தொடரும் என்பதில்ஆச்சரியமில்லை.