ஐபிஎல் தொடரில் அசத்தி இந்திய அணியில் இடம் பெறுவேன்…! தமிழகத்தின் யார்க்கர் கிங் நம்பிக்கை…!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 12, 2023 & 18:30 [IST]

Share

இந்திய அணியில் தமிழகத்திலிருந்து அதிரடியான யார்க்கர் பௌலிங் மூலம் இடம்பெற்ற தங்கராசு நடராஜன் ஒரே தொடரில் மூன்று வடிவ போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றவர்,அதன் பின் ஏற்பட்ட காயத்தினால் இந்திய அணியில் இருந்து விலகிய நடராஜன் தற்போது இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு தொடர்களில் முக்கிய ஒன்றான ஐபிஎல் தொடரில் பங்கேற்று தனது அதிரடியான யார்க்கர் பௌலிங் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை  திணறடித்து அசத்தினார், அவரது அதிரடி பௌலிங்கை வெளிப்படுத்திய தன் மூலம் (2020-2021)ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா பயணிக்கும் இந்திய அணியில் இடம் பெற்றார்.

அந்த தொடரில் தனது சிறப்பான பௌலிங் மூலம் நடராஜன் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நடராஜன் அசத்தினார், அதன்பின் எந்த ஒரு இந்திய வீரருக்கும் இதுவரை கிடைக்காத  ஒரு அரிய வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது, தனது முதல் தொடரிலேயே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய நடராஜன் அதே தொடரில் டெஸ்ட் போட்டியிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இந்திய அணி ஆஸ்திரேலியா விற்கு எதிராக கப்பா டெஸ்ட் போட்டியில்  அசத்தல் வெற்றியை பெற்று சாதனை படைத்தது ,அந்த அணியில் நடராஜனும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை பெருமைகளை தனது முதல் தொடரிலேயே பெற்ற நடராஜன்  காயம் காரணமாக ஓய்வில் சென்றார்,அதன்பின் இதுவரை இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் வரும் 2023 ஐபிஎல் தொடரில் தனது முழு பங்களிப்பையும் அளித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றார், காயம் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் அதன்பின் இந்திய அணியில் எனது பங்களிப்பை பார்த்து இடம்பெற வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக இடம் பெறுவேன் என்றார். 

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நடராஜன் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் நடராஜன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.