Representative Image.
ரஞ்சி டிராபியில் உத்தரகண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாகாலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 25 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், 174 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. மேலும் இந்த ஸ்கோர் மூலம், ரஞ்சி டிராபியில், ஒரு இன்னிங்ஸில் குறைவான ஸ்கோர் எடுத்த அணிகளின் பட்டியலில் இணைந்தது.
முதல் இன்னிங்சில் 107 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், உத்தரகாண்ட் அணி 306/7 என்று டிக்ளேர் செய்ததை அடுத்து, நாகாலாந்து அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் உத்தரகாண்டின் சுழற்பந்து வீச்சாளர்களான மயங்க் மிஸ்ரா (9-7-4-5), ஸ்வப்னில் சிங்கின் (9-5-21-4) சுழலில் சிக்கி நாகாலாந்து 18 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.
2010-11 சீசனில் ராஜஸ்தானால் 21 ரன்களுக்கு வீழ்ந்த ஹைதராபாத் அணியின் ஸ்கோர் தான் மிகவும் குறைவான ஸ்கோராக உள்ளது. இந்த பட்டியலில் நாகாலாந்து இணைந்து, ரஞ்சி டிராபி வரலாற்றில் நான்காவது மிகக் குறைந்த ஸ்கோர் எடுத்த அணியாக உள்ளது மற்றும் கடந்த 41 ஆண்டுகளில் இது இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோராகவும் பதிவாகியுள்ளது.
தெற்கு பஞ்சாபின் 22 (வட இந்தியாவிற்கு எதிராக; 1934-35) பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் இரண்டு முறை 23 ரன்களுக்கு (டெல்லிக்கு எதிராக, 1960-61) மற்றும் ஹரியானா (1977-78) ஆட்டமிழந்தது. அதே சமயம் சிந்துவும் 1938-39 இல் அதே 23 ரன்களுக்கு (தெற்கு பஞ்சாப் எதிராக) வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.