அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு!!

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முறையாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ட்விட்டரில் தனது முடிவை அறிவித்த முரளி விஜய், கிரிக்கெட் உலகில் புதிய வாய்ப்புகள் மற்றும் அதன் வணிகப் பக்கத்தை ஆராய்வதாக கூறினார்.
தனது நீண்ட பதிவில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ), சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் செம்ப்ளாஸ்ட் சன்மார், தனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், வழிகாட்டிகள், ஆதரவு ஊழியர்கள் மற்றும் அவரது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
விஜய் 2002 முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். சென்னையில் கிளப் கிரிக்கெட்டில் தொடங்கி 2004 இல் தமிழ்நாடு 22 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பிடித்தார்.
மேலும் 2008 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக அறிமுகமானார். 2017க்கு பிறகு சரியான பார்மில் இல்லாததால் ஓரம்கட்டப்பட்டார்.
இந்நிலையில், தனக்கு வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதால் அதிருப்தியடைந்த முரளி விஜய் சமீபத்தில், பிசிசிஐ மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.