மும்பை அணி அபார வெற்றி.. கடைசியில் சொதப்பிய கொல்கத்தா.. | IPL 2023 MI vs KKR Match Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 22வது லீக் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, குர்பாஸ்-ஜெகதீசன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மும்பை அணி தரப்பில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் ஓவரை வீச, தமிழக வீரர் ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர் 100(49) பொறுப்புடன் விளையாடியதில் கொல்கத்தா அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது. பின்னர், பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் தொடக்க வீரர் குர்பாஸ் 8(12)ஆட்டமிழக்க, நிதிஷ் ராணா 5(10) களமிறங்கினார். ஷோக்கின் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயன்றபோது இவரும் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஷர்துல் தாகூர் 13(11) ரன்னிலும் ஆட்டமிழக்க, இதனால் கொல்கத்தா அணி தடுமாற தொடங்கியது. சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 104(51) ரன்களி ஆட்டமிழந்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 185/6 ரன்கள் குவித்தது.
அதன்பின் பேட்டிங் செய்ய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் - ரோஹித் சர்மா களமிறங்கினர். கொல்கத்தா அணி தரப்பில் உமேஷ் யாதவ் முதல் ஓவரை வீசினார், முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்களை எடுத்தது மும்பை அணி. பின்னர், பொறுப்புடன் விளையாடிய இஷான் கிஷன் இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி, சிக்ஸரும் விளாசினார். அதிரடியாக ஆடி வந்த ரோஹித் சர்மா 20(13) சுயாஷ் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து இஷான் கிஷனும் 50(25) ரன்களில் வெளியேறினார். இதில் 5 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளும் அடங்கும்.
அவர்களை தொடர்ந்து திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் பார்ட்னர்ஷில் மும்பை அணிக்கு சிறப்பாக ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் மழை பொழிந்தார். 13 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 147/2 ரன்களை குவித்தது. பின்னர், சுயாஷ் சர்மா பந்து வீச்சில் திலக் வர்மா 30(25) ஆட்டமிழக்க, அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் 43 ரன்களில் வெளியேறினார். இறுதியாக, மும்பை அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தாவிற்கு இது 3வது தோல்வியாகும். மும்பைக்கு 2வது வெற்றியாகும்.