எம்.எஸ்.தோனி சாதனையை சமன் செய்த நியூசிலாந்து ஆல்ரவுண்டர்..! ரசிகர்கள் பெருமிதம்..!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இறுதிவரை அதிரடிகள் நிலவியது, இரு அணி வீரர்களும் தங்களின் திறனை நிரூபித்து அசத்தினார்கள்.இந்த போட்டியில் பல சாதனைகள் முறியடிக்க பட்டது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகத்தான ஒரு சாதனையை நியூசிலாந்து ஆல்ரவுண்டர் சமன் செய்துள்ளார்.
இந்திய அணி சார்பில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்த இளம் வீரர் சுப்மன் கில் முயற்சியால் 50 ஓவர்கள் முடிவில் 349 ரன்கள் பதிவு செய்யப்பட்டது.அதன்பின் 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் உடனுக்குடன் தங்களின் விக்கெட்டுகளை இழந்தார்கள்.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் நம்பர் 7 இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினார், இந்திய அணியின் வெற்றி உறுதியாகி விட்டது என்று அனைவரும் நினைத்த வேளையில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி மைக்கேல் பிரேஸ்வெல் 57 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
இந்த போட்டியில் நம்பர் 7 இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கி சதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் முன்னால் கேப்டன் எம்.எஸ்.தோனி படைத்த மிகவும் அரிதான சாதனையை சமன் செய்தார் நியூஸிலாந்தின் ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னர் ஒருநாள் போட்டியில் நம்பர் 7 இடத்தில் பேட்டிங் செய்த தோனி சதம் அடித்து 139*(97) ரன்களை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் இந்திய அணிக்கு பயம் காட்டிய பிரேஸ்வெல் 140(78) ரன்களை பதிவு செய்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார், எனவே இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் நடந்த சம்பவங்கள் ஒரு நாள் உலக கோப்பையை அடைவது அவ்வளவு எளிதல்ல என்பதை இந்திய அணிக்கு உணர்த்தியுள்ளது என்று சிலர் இணையத்தில் தங்களின் கருத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த போட்டியை கண்ட அனைவரும் நம்பிக்கையை இழந்த வேளையில் தனது துரித ஆட்டத்தால் இறுதி வரை எடுத்து சென்ற நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடி ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் உட்பட அனைவரும் பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.