டி20 உலகக்கோப்பை தோல்வியால்.. மீண்டும் இந்திய அணியில் எண்ட்ரீ கொடுக்கும் தல தோனி.. குஷியில் ரசிகர்கள்...

Representative Image. Representative Image.

By Nandhinipriya Ganeshan Published: November 15, 2022 & 13:55 [IST]

Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து தோல்விக்கான காரணங்கள் என்று பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வண்ணம் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, தோனி போன்ற ஒரு கேப்டன் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை என்றும் விவாதம் எழுந்து வருகிறது.

இந்தநிலையில் தான் பிசிசிஐ நிர்வாகம் அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம் என்பதற்கான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எம்.எஸ்.தோனியை இந்திய டி20 அணிக்குள் மீண்டும் கொண்டு வர ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை ஆலோசகராக இல்லை.

பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டால் 3 வடிவ அணியையும் சமாளிப்பது கடினமாக உள்ளதால், டி20 அணியின் இயக்குநராக தோனிக்கு நிரந்தர பதவி வழங்கவுள்ளனர். கிரிக்கெட் வீரர்களில் யார் முழுவதும் ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கே நிரந்த பதவிகள் கொடுக்கப்படும். அந்தவகையில், தோனியும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார். எனவே, அந்த பதிவியை தோனிக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி, இந்த பதவிக்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை தோனிக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதை தோனி ஏற்றுக்கொள்வாரா மாட்டாறா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20ல் உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியின் ஆலோகரான தோனி செயல்பட்டிருந்தார். ஆனால், அப்போது அவருக்கு குறுகிய காலமே அவகாசம் அளிக்கப்பட்டது. அதனால், அவ்வளவாக தாக்கம் ஒன்றும் ஏற்படவில்லை. ஆனால், இனி இயக்குநராக செயல்படுவார் என்பதால் இந்திய அணியில் ஒரு மாஸ் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.