இந்திய அணியை சர்ப்ரைஸ் விசிட் செய்த தோனி ..! இளம் வீரர்களுடன் கலந்துரையாடால்..!

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பங்கேற்க ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பயிற்சியில் உள்ளது, அங்கு சென்ற அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி வீரர்களுகளுடன் உரையாடினார்.
ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆனா இளம் இந்திய அணி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஎ சர்வதேச மைதானத்தில் முதல் டி20 போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மைதானதுக்கு சென்ற இந்திய அணியின் கேப்டன் கூல் எம்.எஸ்.தோனி இளம் வீரர்களுடன் கலந்துரையாடினார்.
இந்திய அணியின் டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு ஆசான் போன்றவர் தோனி, எனவே அவரை சந்தித்த பாண்டியா மற்றும் அணியினர் தனி தனியாக தோனி உடன் உரையாடிய காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சந்திப்பின் போது அணியின் இளம் வீரர்கள் இஷான் கிஷான்,வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் ஆகியோர் பல அறிவுரைகளை பெற்றதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது,மேலும் ராஞ்சி தோனியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் இருந்த போதும், ஓய்வு பெற்ற பின்பும் இளம் வீரர்களுக்கும் தனது அனுபவங்களை பகிர்வதும் மற்றும் வீரர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் என்றும் எம்.எஸ்.தோனி உள்ளார் என்று பதிவிட்டு ரசிகர்கள் இணையத்தில் இந்த காணொளியை பகிர்ந்து வருகிறார்கள்.