ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்…! முகமது சிராஜ் அசத்தல்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 18, 2023 & 15:20 [IST]

Share

இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது, இந்த தொடரில் இந்திய வீரர்கள் பலரும் தங்களின் முழு திறனையும் வெளிப்படுத்தி வெற்றிக்கு உதவினார்கள். இந்த தொடரில் முகமது சிராஜ் தனது  சிறப்பான பவுலிங்கால் உலகக் கோப்பைக்கான ஒருநாள் அணியில் தனது இடத்தை உறுதி படுத்தி விட்டார், மேலும் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முன்னேறி அசத்தியுள்ளார்.

இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடருக்கான பயணத்தை தொடங்கி விட்டது என்று அனைத்து அணிகளுக்கும் தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு எதிரான தொடரில் மிக பெரிய அளவில் சாதனைகளை படைத்து வெற்றிகளையும் பெற்று நிரூபித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தொடரில் பல இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைத்து தங்களின் திறனை வெளிப்படுத்தினார்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன்  மூலம் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் அடைந்து அசத்தியுள்ளார்கள்.

இந்திய அணியின் வேகப்பந்து பவுலரான முகமது சிராஜ் கடந்த சில வருடங்களாக அதிரடி பவுலிங்கை வெளிப்படுத்தி அனைவரையும் அசத்தி வருகிறார், இந்நிலையில் பல விமர்சனங்களுக்கு உள்ளான அணியின் வேகப்பந்து பவுலர் முகமது சிராஜ் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகவும் அற்புதமான பவுலிங்கை வெளிப்படுத்தி தொடரில் 9 விக்கெட்டுகளை பெற்றார்.   

 முகமது சிராஜ் கடந்த தொடரில் தனது அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறி 685 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பெற்றுள்ளார்.அவரது திறமை கண்டு வியந்த கிரிக்கெட் வல்லுநர்கள், நிபுணர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய அணியில் நாயகன் விராட் கோலி கடந்த தொடரில் இரண்டு சதங்கள் அடித்ததன் மூலம் ஐசிசி தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறினார், அதேபோல் சுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் போன்ற வீரர்களும் முன்னேற்றம் அடைந்து அசத்தியுள்ளார்கள்.இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு நாள் உலக கோப்பையை பெற்று தருவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.