இந்தியாவின் இளம் வேகப்பந்து வீரருக்கு அறிவுரை வழங்கிய முகமது ஷமி…! ரசிகர்கள் பாராட்டு..!

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வேகப்பந்து பவுலர்கள் மிரட்டல் ஆட்டத்தால் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது, குறிப்பாக இந்த போட்டியில் பவுலிங்கில் அசத்திய அணியின் முன்னணி பவுலர் முகமது ஷமி இளம் வீரர் ஒருவருக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது, இதில் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி முன்னிலையில் உள்ளது.மேலும் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பௌலர்கள் அதிரடியை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியை துவம்சம் செய்தார்கள்.
இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து பௌலர்கள் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தி 108 ரன்களில் நியூசிலாந்து அணியை ஆல் அவுட் செய்து அசத்தினார்கள், இந்நிலையில் இந்திய அணி எளிய முறையில் இலக்கை அடைந்து வெற்றியை கைப்பற்றியது.
இந்திய அணியின் முன்னணி பௌலர் ஷமி 6 ஓவர்கள் வீசி ஒரு ஓவர் மெய்டன் செய்து வெறும் 18 ரன்கள் அளித்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்று அசத்தினார் இந்திய அணியில் காயத்தினால் ஜஸ்பிரிட் பும்ரா இல்லாத நிலையில் அந்த இடத்தை முகமது ஷமி நிரப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிக்கு பிறகு ஒரு பேட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொண்ட பொழுது முகமது ஷமி அணியின் இளம் பவுலர் உம்ரன் மாலிக்கிற்கு ஒரு மகத்தான அறிவுரை வழங்கினார், இதில் பேசிய ஷமி இந்த இளம் வயதில் அசாத்திய பவுலராக வேகத்தில் உம்ரன் மாலிக் மிரட்டுவது ஆச்சரியத்தை அளிக்கிறது.
உம்ரன் மாலிக் ஒரு சிறப்பான பவுலர் என்பதில் ஐயமில்லை,அதே சமயத்தில் தனது அதிரடி வேகத்தை மட்டும் அவர் கட்டுப்படுத்தி பவுலிங்கை வெளிப்படுத்தினால் வருங்காலத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக இருப்பார் என்பது உறுதி என்று கூறினார்.
இந்நிலையில் இளம் வீரர்களுக்கு அறிவுரைகளை அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனுபவ வீரராக ஷமி விளங்குவதாக இணையத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.