IND VS AUS TEST 2023 : 2வது டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணியின் ஸ்கெட்ச் ..!! முக்கிய வீரரை களமிறக்க வாய்ப்பு..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வரும் நிலையில், முதல் போட்டியில் இந்திய அணி மிரட்டல் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா முன்னணி வீரர் ஒருவரை களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்கடித்தது, இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா அணி முழு வீச்சில் செயல்பட்டு வரும் நிலையில், அணியின் முன்னணி வேகப்பந்து பவுலர் மிட்சல் ஸ்டார்க் களமிறக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் சிலர் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வில்லை, எனவே 2வது டெஸ்ட் போட்டியில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக விளங்கும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தனது நிலையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து பவுலர் மிட்சல் ஸ்ட்ராக்கை 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சற்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியா அணி திட்டம் போட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் 2வது போட்டியில் விளையாட உடல் தகுதி பெற்றால் அவரும் போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2வது டெஸ்ட் போட்டியில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வரும் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 21 வரை பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள், எனவே இரண்டு அணியின் ப்ளேயிங் லெவனில் உள்ள மாற்றங்களை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.