ஐ.பி.எல் 2023:கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளேயிங்-11 ரெடி ..?? மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லுமா..!

கொல்கத்தா அணி முன்னனி வீரர்கள் பலரை தங்கள் அணியில் அப்படியே தக்கவைத்து நிலையில் மிகவும் குறைந்த தொகையுடனே மினி ஏலத்தில் கலந்து கொண்டது,இருந்த போதிலும் அருமையாக செயல்பட்டு அணியை மேலும் பலப்படுத்தும் விதமாக 8-வீரர்களை வாங்கியது.
ஐ.பி.எல் தொடரில் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது,அதன் பிறகு பலமுறை முயன்றும் அணியில் சிறந்த வீர்ர்கள் உள்ள நிலையிலும் சில தவறுகளால் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கிறது.
இந்த ஏலத்தில் மொத்தமாக 8- வீரர்களை சரியான வியூகத்தால் மிகவும் குறைந்த விலைக்கே வாங்கியது,குறிப்பாக வங்கதேச முன்னனி ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனையும் , நமீபியா அணியின் டேவிட் வைஸ்யும் அவர்களின் அடிப்படை விலைக்கே வாங்கியது.தற்பொழுது சிறந்த பார்மில் இருக்கும் தமிழக வீர்ர் என்.ஜெகதீசனையும் வாங்கியது.
கொல்கத்தா அணி டிரேடிங் முறையில் இந்திய பௌலர் ஷர்துல் தாக்கூர், நியூஸிலாந்து பௌலர் லாக்கி பெர்குசன் மற்றும் ஆப்கானிஸ்தான் விக்கெட்கீப்பீர் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோரை வாங்கி அணியின் பலத்தை அதிகரித்து என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த வருடத்தில் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் ரசிகர்கள் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா அணியில் இருக்கும் அனுபவ வீரர்களை வைத்து உருவான தோராயமான பிளேயிங் -11 கிரிக்கெட் வட்டாரங்களில் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா அணியின் தோராயமான பிளேயிங்-11 : வெங்கடேஷ் ஐயர்,ரஹ்மானுல்லா குர்பாஸ்,ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, உமேஷ் யாதவ்,லாக்கி பெர்குசன்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்:
விக்கெட்கீப்பர்கள் : ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கான்),N.ஜெகதீசன்,லிட்டன் தாஸ் (வங்கதேசம்).
பேட்ஸ்மேன் : ஷ்ரேயாஸ் ஐயர்,ரிங்கு சிங், மந்தீப் சிங்.
ஆல்ரவுண்டர்கள் : வெங்கடேஷ் ஐயர்,அனுகுல் ராய்,நிதிஷ் ராணா, சுனில் நரைன் (மேற்.தீவுகள்), ஆண்ட்ரே ரஸ்ஸல் (மேற்.தீவுகள்), ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்), டேவிட் வைஸ் (நமீபியா),வைபவ் அரோரா.
பௌலர்கள் : லாக்கி பெர்குசன் (நியூசி), ஹர்ஷித் ராணா,ஷர்துல் தாக்கூர்,டிம் சவுத்தி (நியூசி), வருண் சக்ரவர்த்தி, உமேஷ் யாதவ், சுயாஷ் சர்மா,குல்வந்த் கெஜ்ரோலியா.