சச்சினின் சாதனையை முறியடிக்க போகும் விராட் கோலி..! மிகுந்த ஆர்வத்தில் ரசிகர்கள் ..!

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை முறியடிக்க ஒருவரால் முடியும் என்றால் அது விராட் கோலி தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான், அதனை நிரூபிக்கும் வகையில் இலங்கை எதிரான தொடரில் சச்சினின் இரண்டு சாதனைகளை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி டி20 தொடரை 2-1 என்ற நிலையில் தோல்வியை தழுவியது, அதன்பின் இந்திய அணியுடன் 3 ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி குவஹாத்தி, பர்சபர கிரிக்கெட் மைதானத்தில் இன்று (10.01.2023) நடைபெற உள்ளது.இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி தனது ஓய்வில் இருந்து அணிக்கு திரும்பியுள்ளார்.
இதற்கு முன்னர் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் சதம் அடித்ததன் மூலம் கோலி 4-ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் இருந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்,தற்போது நல்ல பார்மில் இருக்கும் கோலி தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்து இலங்கை எதிரான ஆட்டத்தில் சதம் அடித்தால் சச்சினின் இரண்டு முக்கிய சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் லெஜெண்ட் சச்சின் தனது ஒருநாள் கிரிக்கெட் பயணத்தில் இந்திய மண்ணில் 164 போட்டிகளில் 19 சதங்களை பதிவு செய்துள்ளார் ,அதேபோல் கோலி 101 ஒருநாள் போட்டிகளில் 18 சதங்களை இந்திய மண்ணில் பதிவு செய்துள்ளார்.இந்த தொடரில் ஒரு சதம் அடித்தால் கோலி சச்சினின் சாதனையை சமன் செய்வார் ,மேலும் 2 சதங்கள் அடித்தால் சச்சினின் சாதனையை முறியடித்து அசத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 265 ஒருநாள் போட்டிகளில் 12471 ரன்களை பதிவு செய்துள்ளார்,இந்த தொடரில் 180 ரன்களை அடித்தால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த முதல் 5 வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன 448 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12650 ரன்கள் பதிவு செய்து 5-வது இடத்திலும் , இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 18426 ரன்கள் அடித்து முதலிடத்திலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இலங்கைக்கு எதிராக 8 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் சம நிலையில் உள்ளார்கள்,இந்த தொடரில் சதம் அடித்தால் சச்சினை பின்னுக்கு தள்ளி கோலி முதல் இடத்தில் இருப்பார்.
இந்திய அணியின் ரன் மெஷின் என்று செல்லமாக அழைக்க படும் கோலி இந்த தொடரில் சிறப்பாக விளையாடி, அதேபோல் உலக கோப்பையில் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தருவார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.