ரஞ்சி கோப்பை 2022-2023 : இரட்டை சதம் அடித்த கேதார் ஜாதவ்..! வலுவான நிலையில் மகாராஷ்டிரா அணி ..!

இந்திய உள்நாட்டு தொடர்களில் முக்கிய தொடரான ரஞ்சி கோப்பை தற்போது நடந்து வருகிறது,இதில் மகாராஷ்டிரா மற்றும் அசாம் அணிகள் மோதிய போட்டியில் கேதார் ஜாதவின் அதிரடி ஆட்டத்தால் பலமான நிலையில் மகாராஷ்டிரா அணி உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற அங்கித் பவானே பௌலிங்கை தேர்வு செய்தார்,அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அசாம் அணி 274 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.அதன்பின் களமிறங்கிய மகாராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் சித்தேஷ் வீர் 106 ரன்களை அடித்து அணிக்கு நல்ல ஆரம்பத்தை தந்தார்.
ஆனால் அதையும் மறக்கும் அளவுக்கு மகாராஷ்டிரா அணியின் அனுபவ வீரர் கேதார் ஜாதவ் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் உட்பட 283(283) ரன்களை அடித்து அசத்தினார், அதன்பின் அசாம் ஆல்ரவுண்டர் ரியான் பராக் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெறும் 13 ரன்களில் 300 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
கேதார் ஜாதவ் அதிரடி ஆட்டத்தால் மகாராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் முடிவில் 594 ரன்களை பதிவு செய்தது,கடைசியாக இந்திய அணிக்காக கேதார் ஜாதவ் 2020-ஆம் ஆண்டு விளையாடினர். இதுவரை 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கேதார் ஜாதவ் 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உட்பட 1389 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.