‘நீ இந்த நூற்றாண்டின் சிறந்த வீரன்’..! சூர்யா குமார் யாதவுக்கு கபில்தேவ் பாராட்டு ...!

இலங்கை எதிரான டி20 தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சதம் அடித்து அசத்தி அணியின் வெற்றிக்கு உதவிய இந்திய அணியின் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் சூர்யா குமார் யாதவை பல முன்னாள் வீரர்களும்,கிரிக்கெட் நிபுணர்களும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் உலகக்கோப்பை நாயகன் கபில் தேவும் தனது பாராட்டை தெரிவித்து உள்ளார்.
இலங்கை எதிரான கடைசி டி20 போட்டியில் 45 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் அசர வைத்த சூர்யா குமார் யாதவ்,பல சாதனைகளை அன்று படைத்தார் ,குறிப்பாக நான்காவது வீரராக களமிறங்கி 200 மேல் ஸ்ட்ரைக் ரேட் உடன் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த போட்டியில் அவரது அதிரடியால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது, டி20 போட்டியில் முதன் முதலில் களமிறங்கிய அதிலிருந்து தனது வித்தியாசமான பேட்டிங் மூலம் பவுலர்களை மிரள வைக்கிறார் சூர்யா குமார் யாதவ்.
மேலும் மைதானத்தில் அனைத்து திசைகளிலும் அடிப்பதால், இவரை இந்திய அணியின் மிஸ்டர் 360 என்று அனைவரும் அழைக்கின்றனர்.கடைசி டி20 போட்டியில் இவரின் மிரட்டலான ஆட்டத்தை பார்த்த பல முன்னாள் வீரர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த வரிசையில் இந்தியாவின் உலக கோப்பை நாயகன் கபில் தேவ் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் கபில் தேவ் கூறியது சூர்யா குமார் ஆட்டத்தை பார்க்கும் போது சச்சின் டெண்டுல்கர், விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலி, ரிக்கி பாண்டிங் போன்ற வீரர்களை பார்ப்பதை போல் உள்ளது.இப்படி பட்ட வீரர்கள் நூறாண்டுக்கு ஒரு முறை மட்டும் தான் உதய மாவார்கள்,சூர்யா குமார் யாதவ் அப்படி பட்ட வீரர் தான் என்று கூறினார்.
இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது, சூர்யா குமார் யாதவ் போன்ற வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு உதவினால் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.