Representative Image.
இந்திய அணியின் டி20 கேப்டன் பதிவில் சமீப காலமாக சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீது முன்பை போல் அவர் அதிரடியாக விளையாடுவதில்லை என்ற சில விமர்சனங்கள் எழுந்துள்ளது, இதுகுறித்து இந்தியாவின் முன்னால் கேப்டன் கபில்தேவ் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்திய அணியின் முத்தரப்பு தொடர்களின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா பணிச்சுமை காரணமாக டி20 போட்டிகளில் விளையாடுவது இல்லை, எனவே இந்திய அணியின் டி20 அணியின் புதிய கேப்டன் பதவியை பெற்ற ஹர்திக் பாண்டியா சிறப்பான முறையில் அணியை வழி நடத்தி வருகிறார்.
மேலும் அடுத்த ஆண்டு வரும் டி20 உலக கோப்பையை மனதில் வைத்து இப்போதே இளம் வீரர்கள் கொண்ட படையை உருவாக்கும் முயற்சியில் பிசிசிஐ நிர்வாகம் இறங்கியுள்ளது. அதற்கு ஏற்றார் போல் முன்னணி வீரர்கள் யாரும் டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய டி20 அணியின் அணியில் இடம்பெறவில்லை.
இந்த ஆண்டு நடக்க விருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரை மனதில் வைத்து முன்னணி வீரர்கள் அனைவரும் அதில் கவனம் செலுத்தும் வகையில் விளையாடி வருகிறார்கள் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் கருத்துகள் எழுந்துள்ளது.
ஆனால் இந்திய அணியின் டி20 கேப்டனாக இருக்கும் பாண்டியா கூடிய விரைவில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அணியின் முழுநேர கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்து கேப்டன் பதவிக்கு வரும் ஹர்திக் பாண்டியாவின் சமீபத்திய ஆட்டம் குறித்து கருத்துக்கள் விமர்சனங்கள் எழுந்துள்ளன, இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆல்ரவுண்டர் உலக கோப்பை நாயகன் என பல புகழ் களுக்கு சொந்தக்காரரான கபில் தேவ் ஹர்திக் பாண்டியா வுக்கு ஆதரவாக கருத்தை தெரிவித்துள்ளார்.
கபில் தேவ் கூறியது இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பிசிசிஐ நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை அறிவிப்பதாக இருத்தலால் அவருக்கான வாய்ப்புகளை வழங்கி தான் ஆக வேண்டும் , வெறும் ஒரு சில தொடர்களில் வாய்ப்பு அளித்து விட்டு நீங்கள் சரியாக பங்களிக்கவில்லை உங்களுக்கு இனி அணியில் வாய்ப்பு இல்லை என்று கூறினால் யாராலும் அணியின் கேப்டனாக பொறுப்போடு விளையாட முடியாது.
ஒரு அணியின் கேப்டன் பதவி என்பது முக்கியமான பொறுப்பாகும், அதை சரிவர செய்து தனது விளையாட்டிலும் சிறப்பாக பங்களிக்க வேண்டும் என்பது சாதாரண காரியம் இல்லை, பாண்டியாவுக்கு தேவையான வாய்ப்பை முதலில் கொடுங்கள் பிறகு அவர் யார் என்று உங்களுக்கு நிரூபிப்பார் என்று கபில்தேவ் ஆதரவாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
இந்திய அணியின் அடுத்த கேப்டன் பொறுப்பை பிசிசிஐ நிர்வாகம் ஹர்திக் பாண்டியா இடம் தான் கொடுக்க உள்ளார்கள் என்பது போன்ற கருத்துக்கள் எழும் நிலையில், சிறிது காலம் தொடர்ச்சியாக ஹர்டிக் பாண்டியாவுக்கு ஆட்டத்தின் போக்கை பார்க்காமல் அணியில் இடம் வழங்கி அவரின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பல கருத்துக்கள் இணையத்தில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.