ஐசிசியின் சக்தி வாய்ந்த பதவிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தேர்வு!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 12, 2022 & 18:29 [IST]

Share

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஐசிசியின் சக்திவாய்ந்த நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிசி போர்டு கூட்டத்தில் கிரெக் பார்க்லே ஒருமனதாக ஐசிசியின் தலைவராக மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"ஒவ்வொரு உறுப்பினரும் ஜெய்ஷாவை நிதி மற்றும் வணிக விவகார கமிட்டியின் தலைவராக ஏற்றுக்கொண்டனர். மேலும் இது ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லேக்கு சமமான சக்தி வாய்ந்த பதவியாகும்." என ஐசிசி தரப்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

ஜெய் ஷா பதவி எவ்வளவு சக்தி வாய்ந்தது?

உறுப்பு நாடுகளிடையே வருவாய் பகிர்வு மற்றும் ஆண்டு முழுவதும் பல்வேறு முக்கிய ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை இந்த அமைப்பு கையாளும். நிதி மற்றும் வணிக விவகார கமிட்டிக்கு எப்போதும் ஐசிசி போர்டு உறுப்பினரே தலைமை தாங்குகிறார். ஷாவின் தேர்தல் அவர் ஐசிசி வாரியத்தில் பிசிசிஐயை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்பதை தெளிவுபடுத்துகிறது.

முன்னதாக சீனிவாசன் காலத்தில் ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார குழுவின் தலைவர் பதவி இந்தியாவிடம் இருந்தது. ஆனால் ஐசிசி தலைவராக ஷஷாங்க் மனோகர் இருந்த காலத்தில் பிசிசிஐயின் அதிகாரம் கணிசமாகக் குறைந்திருக்கலாம். உண்மையில், நிர்வாகிகள் கமிட்டியின் போது, ​​பிசிசிஐக்கு நிதி மற்றும் வணிக விவகார கமிட்டியில் எந்தப் பிரதிநிதித்துவமும் இல்லை என்ற நிலை இருந்தது.

பின்னர் பிசிசிஐயின் தலைவரான சவுரவ் கங்குலி கடந்த ஆண்டு வரை நிதி மற்றும் வணிக விவகார குழுவில் உறுப்பினராக இருந்தார். "இந்தியா உலகளாவிய கிரிக்கெட்டின் வர்த்தக மையமாக உள்ளது, பிராந்தியத்தில் இருந்து 70 சதவீதத்திற்கும் அதிகமான ஸ்பான்சர்ஷிப் வருகிறது. ஐசிசி நிதி மற்றும் வணிக விவகார கமிட்டி எப்போதும் பிசிசிஐ தலைமையில் இருக்க வேண்டியது அவசியம்." என்று பிசிசிஐ நினைக்கிறது.

தலைவர் பதவி நீட்டிப்பு?

தற்போது தலைவராக இருக்கும் கிரெக்கைப் பொறுத்த வரையில், ஜிம்பாப்வேயின் தவெங்வா முகுஹ்லானி தலைமை பொறுப்பில் இருந்து விலகியதால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு மரியாதைக்குரியது, மேலும் எனது சக ஐசிசி இயக்குநர்கள் தங்கள் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்," என்று கிரெக் தனது மறு நியமனம் குறித்து கூறினார்.