சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரபல ஆல்ரவுண்டர் போட்ட ஒரு ட்வீட்..! ரசிகர்கள் மிகுந்த ஆனந்தம்..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 23, 2023 & 11:06 [IST]

Share

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக விளங்கி வரும் ரவீந்திர ஜடேஜா தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக பல மாதங்களாக ஓய்வில் இருந்தார், தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஜடேஜா தனது கம் பாக்கை இணையத்தில் ட்விட்டர் செயலியில் ஒரு பதிவின் மூலம் அறிவித்து  ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இந்திய அணிக்காக தொடர்ந்து  பல ஆண்டுகளாக  சிறப்பான ஆல்ரவுண்டராக கலக்கி வருபவர் ரவீந்திர ஜடேஜா, இடது கை ஆட்டக்காரர் ஆன ஜடேஜா  தனது அதிரடி பேட்டிங் மட்டும் சுழல் பந்து வீச்சால் இந்திய அணிக்கு பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.கடைசியாக 5 மாதங்களுக்கு முன்பு ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் பொழுது முழங்காலில் காயம் ஏற்பட்டு விலகிய ஜடேஜா அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார்.    

 


இந்நிலையில் காயத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ள ஜடேஜா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார் ,அதற்கு முன் ரஞ்சி கோப்பையில் கடைசி லீக் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாட சென்னை வந்துள்ளார்,தனது வருகையை இணையத்தில் “வணக்கம் சென்னை” என்ற ஒரு பதிவின் மூலம் அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.

ஜடேஜா தனது கம் பாக்கை நிரூபிக்கும் வகையில் தமிழக அணிக்கு எதிராக சௌராஷ்டிரா அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட உள்ளார். இது குறித்து பேசிய சௌராஷ்டிரா அணி பயிற்சியாளர் நீரஜ் ஒடெட்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியின் அறிவுறுத்தலின் பெயரிலே ஜடேஜா இந்த தொடரில் பங்கேற்க உள்ளார், மேலும் ஜடேஜா மீண்டும் களத்தில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளார் என்று கூறினார்.

ஜடேஜாவின் பதிவை பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள், குறிப்பாக “வணக்கம் சென்னை” என்ற பதிவின் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பிளேயர் ஆகா இருக்கும் ஜடேஜா சி.எஸ்.கே அணியின் ரசிகர்களுக்கு அளித்த செய்தியாக நினைத்து பல ரசிகர்கள் இணையத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  

இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நுழைய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றிகளை பெற ஜடேஜாவின் பங்களிப்பு முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது, எனினும் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர் தனது பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த ரஞ்சி கோப்பை போட்டியில் அதற்கான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.