IND VS AUS TEST 2023 : ஆஸ்திரேலியா தரப்பில் ஜடேஜா மீது விழுந்த விமர்சனங்களுக்கு பிசிசிஐ மற்றும் இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி..!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை சாய்த்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த விமர்சனத்திற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
இந்த போட்டியின் முதல் நாளில் இந்திய அணி அற்புதமான பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலியா வீரர்களை திணறடித்து வெறும் 177 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா தான், 22 ஓவர்கள் வீசி 8 ஓவர்கள் மெய்டன் செய்து 47 ரன்கள் வழங்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்களை தனது சூழலில் ஜடேஜா வீழ்த்தியதன் மூலம் தான் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை சிறிய இலக்கில் ஆல் அவுட் செய்ய முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் ஜடேஜா பந்து வீசிய போது சிராஜிடம் ஏதோ வாங்கி கையில் தடவிக் கொண்டார்.
இந்த காணொளி வெளியாகி இணையத்தில் பரவிய நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள், ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிபுணர்கள் உட்பட பலர் ஜடேஜா பந்தை சேதப்படுத்தி உள்ளார் அதனால் தான் சிறப்பாக பந்து வீச முடிந்தது என்று விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிசிசிஐ தக்க விளக்கம் அளித்துள்ளது.
இடது கை பௌலர் ஆனா ஜடேஜா தொடர்ந்து பந்து வீசியநிலையில் கையில் எரிச்சல் ஏற்பட்டதால் மருத்துவரின் அறிவுறுத்தல் அடிப்படையில் விரல்களில் மருந்து தடவி கொண்டார் அது விதிமுறைக்கு உட்பட்டது தான் என்று விளக்கம் கொடுத்தனர், எனவே ஆஸ்திரேலியா மீடியா மற்றும் முன்னாள் வீரர்கள் தான் தேவை இல்லாத விமர்சங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
ஜடேஜாவுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் இணையத்தில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் மற்றும் மீடியாக்கள் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி அளிக்கும் விதத்தில் இந்திய ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.