இந்திய அணியில் தோனியின் இடத்தை நான் நிரப்புவேன்..! இஷான் கிஷான் நம்பிக்கை..!

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் அண்மையில் அளித்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உடைய இடத்தை தான் நிரப்புவேன் என்று கூறினார்.
இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் இஷான் கிஷான் அதிரடி ஆட்டத்துக்கு பேர் போனவர் சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார், அதன்பின் டி20 இந்திய அணியில் தொடர்ச்சியாக அளிக்க பட்ட வாய்ப்பில் விளையாடிய இஷான் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
இந்திய அணிக்காக கடைசியாக இஷான் விளையாடிய 6 டி20 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார், குறிப்பாக கடைசியாக அவர் விளையாடிய தொடர்களில் அவரது அதிகபட்ச ரன் 37 தான் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில் தொடக்க வீரர் இடத்தில் சிறப்பாக விளையாடி வருவதால் மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்ட இஷான் கிஷான் ஒருநாள் போட்டிகளிலும் ரன்கள் பெற முடியாமல் தவித்தார்.
இந்நிலையில் இந்திய அணி அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது, இதில் முன்னணி வீரர்கள் ஓய்வில் இருப்பதால் இஷான் கிஷான் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார், எனவே இந்த தொடரில் சிறப்பாக விளையாடி தனது பழைய பார்முக்கு வருவாரா ..?? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இஷான் கிஷான் ஒரு அதிரடியான பேட்ஸ்மேன் என்பதால் கண்டிப்பாக ராஞ்சியில் நடைபெற உள்ள முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்க படுகிறது, அதற்கு வலு சேர்க்கும் விதமாக அண்மையில் பிசிசிஐக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்.எஸ்.தோனி உடைய இடத்தை தனது முயற்சியினால் கண்டிப்பாக நிரப்புவேன் என்று கூறியுள்ளார்.
இந்திய அணி தோனிக்கு பிறகு ஒரு நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடி வருகிறது, ரிஷாப் பந்த் அந்த இடத்தில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த பொழுது விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டு தற்போது ஓய்வில் உள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு உதவும் வகையில் இஷான் கிஷான் சிறப்பாக அந்த இடத்தில் விளையாடுவர் என்று எதிர்பார்க்க படுகிறது.
இந்திய அணியில் இஷான் கிஷான் உடைய இன்ஸ்பிரஷன், முன்னோடி வழிகாட்டி எல்லாம் தோனி தான் என்று பலமுறை கூறியுள்ளார், எனவே தோனி போல் விரைவில் தனது அதிரடி ஆட்டத்தை விமர்சனத்துக்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.