ஐபிஎல் 2023 : ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டங்கள் பெற்ற அணிகள் ஒரு பார்வை..!!

இந்தியாவின் முக்கிய டி20 தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 2023 அன்று தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது, இந்நிலையில் இதுவரை நடைபெற்ற 15 ஐபிஎல் தொடர்களில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்களை பெற்றவர்கள் குறித்து காண்போம்.
உலக அளவில் முக்கிய தொடராக அதிக ரசிகர்களை கொண்டுள்ள இந்தியாவின் ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்து தற்போது 2023 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது.கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம் இந்த தொடரில் இடம் பெற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த வீரர்கள் தான் என்று கூறினால் மிகையில்லை.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சாம்பியன் பட்டம் பெற்ற அணிகள் விவரம் :
ஐபிஎல் 2008 |
சாம்பியன் அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் |
ரன்னர் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் |
அதிக ரன்கள் - ஷான் மார்ஷ் (616 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - சோஹைல் தன்வீர் (22 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2009 |
சாம்பியன் அணி - டெக்கான் சார்ஜர்ஸ் |
ரன்னர் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
அதிக ரன்கள் - மாத்யூ ஹேடன் (572 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - ஆர்.பி.சிங் ( 23 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2010 |
சாம்பியன் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் |
ரன்னர் அணி - மும்பை இந்தியன்ஸ் |
அதிக ரன்கள் - சச்சின் டெண்டுல்கர் (618 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - பிரக்யான் ஓஜா (21 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2011 |
சாம்பியன் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் |
ரன்னர் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
அதிக ரன்கள் - கிறிஸ் கெயில் (618 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - லசித் மலிங்கா (28 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2012 |
சாம்பியன் அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
ரன்னர் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் |
அதிக ரன்கள் - கிறிஸ் கெயில் (733 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - மோர்னே மோர்கல் ( 25 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2013 |
சாம்பியன் அணி - மும்பை இந்தியன்ஸ் |
ரன்னர் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் |
அதிக ரன்கள் - மைக் ஹாசி (733 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - டுவைன் பிராவோ (33 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2014 |
சாம்பியன் அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
ரன்னர் அணி - கிங்ஸ் 11 பஞ்சாப் |
அதிக ரன்கள் - ராபின் உத்தப்பா (660 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - மோஹித் சர்மா (23 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2015 |
சாம்பியன் அணி - மும்பை இந்தியன்ஸ் |
ரன்னர் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் |
அதிக ரன்கள் - டேவிட் வார்னர் ( 562 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - டுவைன் பிராவோ (28 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2016 |
சாம்பியன் அணி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
ரன்னர் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
அதிக ரன்கள் - விராட் கோலி (973 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - புவனேஷ்வர் குமார் (23 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2017 |
சாம்பியன் அணி - மும்பை இந்தியன்ஸ் |
ரன்னர் அணி - ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் |
அதிக ரன்கள் - டேவிட் வார்னர் ( 641 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - புவனேஷ்வர் குமார் (26 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2018 |
சாம்பியன் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் |
ரன்னர் அணி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
அதிக ரன்கள் - கேன் வில்லியம்சன் ( 735 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - ஆண்ட்ரூ டை (23 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2019 |
சாம்பியன் அணி - மும்பை இந்தியன்ஸ் |
ரன்னர் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் |
அதிக ரன்கள் - டேவிட் வார்னர் ( 692 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - இம்ரான் தாஹிர் (26 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2020 |
சாம்பியன் அணி - மும்பை இந்தியன்ஸ் |
ரன்னர் அணி - டெல்லி கேபிட்டல்ஸ் |
அதிக ரன்கள் - கே.எல். ராகுல் (670 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - காகிசோ ரபாடா (30 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2021 |
சாம்பியன் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் |
ரன்னர் அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
அதிக ரன்கள் - ருதுராஜ் கெய்க்வாட் (635 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - ஹர்ஷல் பட்டேல் (32 விக்கெட்டுகள் ) |
ஐபிஎல் 2022 |
சாம்பியன் அணி - குஜராத் டைட்டன்ஸ் |
ரன்னர் அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் |
அதிக ரன்கள் - ஜோஸ் பட்லர் (863 ரன்கள் ) |
அதிக விக்கெட்டுகள் - யுஸ்வேந்திர சாஹல் (27 விக்கெட்டுகள் ) |