ஐ.பி.எல் 2023: முக்கிய அனுபவ டி-20 ஆல்ரவுண்டரை வாங்க முன்வராத அணிகள்..! இதுதான் காரணமா..?

ஐ.பி.எல் தொடரின் மினி ஏலம் கொச்சியில் மிகவும் அதிரடியாக நடந்து முடிந்தது,மேலும் ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிகவும் அதிக விலையாக 18.5கோடிக்கு ஒரு வீரரை விற்ற ஏலமாகவும் இது பதிவானது.
ஐ.பி.எல் தொடரின் 16-வது சீசனில் பங்கேற்பதற்கு முன் அணியில் இருக்கும் முக்கிய இடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட மினி ஏலத்தை மிகவும் சிறப்பாக பயன்படுத்திய 10-அணிகளும் அவர்களுக்கு ஏற்றவாறு முன்னனி வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்தினார்கள்.
இந்த ஏலத்தில் அதிக விலையாக 18.5 கோடிக்கு சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது,அடுத்தாக 17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி இளம் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை வாங்கியது,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடிக்கு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை வாங்கி அசத்தியது.
இந்த மினி ஏலத்தில் ஆல்ரவுண்டர்களை வாங்க பல அணிகள் மிகவும் ஆர்வம் காட்டிய வேலையில்,டி-20 தொடரில் ஆல்ரவுண்டர் தரவரிசையில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசனை எந்த அணி நிர்வாகமும் வாங்க முன் வரவில்லை.
ஏலத்தில் முதல் சுற்றில் அவரது பெயரை அறிவித்த போது அனைத்து அணிகளும் மௌனம் காத்தது மிகவும் ஆச்சரியத்தை அளித்தது.
ஷகிப் அல் ஹசன் வங்கதேச அணியின் ஆல்-ரௌண்டராக மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்,அதே போல் அணியின் கேப்டனாகவும் செயல்படும் திறமையுள்ள அனுபவ வீரர்.
ஷகிப் அல் ஹசன் ஏலத்தில் தனது அடிப்படை விலையாக 2-கோடியை நியமித்திருந்தார்,அவரை ஏலத்தில் வாங்க அணிகள் போட்டிபோடும் என்று எதிர்பார்த்த நிலையில் அவரை யாரும் வாங்க முன் வரவில்லை.
இதற்கு காரணமாக கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படும் செய்திகள்,ஷகிப் அல் ஹசன் ஒருமுறை போட்டியில் சூதாட்ட விவகாரத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்த நிலையில் ஐ.சி.சி நிர்வாகத்தால் ஒரு ஆண்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாக அறிய முடிகிறது.மேலும் ஒரு போட்டியில் நடுவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் சர்ச்சையில் சிக்கினார்.
ஷகிப் அல் ஹசனை ஏலத்தில் எடுத்தால் ஐ.பி.எல் தொடரிலும் இது போன்ற சம்பவங்களால் அணிக்கு எங்கே கெட்ட பெயர் வந்துவிட போகிறது என்ற எண்ணத்தில் அணிகள் இவரை வாங்க முன்வரவில்லை என்று அறிய முடிகிறது.இறுதியாக கொல்கத்தா நிர்வாகத்தால் ஏலத்தில் 1.5 கோடி வாங்கப்பட்டர்.
கொல்கத்தா அணியில் ஏற்கனவே முன்னனி ஆல்ரவுண்டர்களாக சுனில் நரைன்,ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்ற வீரர்கள் இருப்பதால் ஷகிப் அல் ஹசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்,அனுபவ வீரராக அணியில் இளம் வீரர்களுக்கு உதவுவார் என்பதால் கொல்கத்தா அணி ஏலத்தில் இவரை எடுத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.