ஐ.பி.எல் 2023: 13 மடங்கு அதிக விலைக்கு ஏலம் போன ஜம்மு-காஷ்மீர் இளம் ஆல் ரவுண்டர்.. அப்படியென்ன ஸ்பெஷல் இவரிடம்?

ஐ.பி.எல் ஏலத்தில் மிகவும் சுவாரஸ்ய சம்பவமாக இந்திய அணியில் இடம்பெறாத விவ்ராந்த் சர்மா என்ற இளம் வீரரை சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி அவரது அடிப்படை விலையை விட 16-மடங்கு அதிகமாக 2.6 கோடிக்கு போட்டிபோட்டு வாங்கியது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இடதுகை ஆல்ரௌண்டரான விவ்ராந்த் சர்மா அண்மையில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபியில் தனது மாநில அணிக்க்கும் உத்தரகாண்ட அணிக்கு எதிராக நடந்த முக்கிய போட்டியில் சிறப்பாக விளையாடி 124 பந்துகளில் 169 ரன்களை அடித்து விளாசினார்.
இவரின் அசாத்திய ஆட்டத்தால் ஜம்மு-காஷ்மீர் அணி அந்த போட்டியில் வெற்றிப் பெற்று முதல் முறையாக நாக்கவுட் சுற்றுக்கு முன்னேறியது. மேலும் அண்மையில் நடந்து கொண்டிருக்கும் ரஞ்சி டிராபியில் மத்தியபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் விவ்ராந்த் சர்மா 62 பந்துகளில் 69 ரன்களை அடித்து தனது அணியின் வெற்றிக்கு உதவினார்.
சையத் முஷ்டாக் அலி டிராபியிலும் இரண்டு அரைசதங்களை பதிவு செய்தார். 23-வயது நிரம்பிய இந்த இளம் வீரர் தனது அசாத்திய பேட்டிங்கின் மூலம் எதிரணியின் பௌலர்களை சிதறடிக்கிறார். சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி இவரின் இந்த சிறப்பான ஆட்டத்தை பார்த்தே 20 லட்சமாக இவரது அடிப்படை விலையிலிருந்து போட்டிபோட்டு கொண்டு 2.6 கோடிக்கு வாங்கியது என்பது தெளிவாக தெரிகிறது.
சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி விவ்ராந்த் சர்மாவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் தனது ஆட்டத்தின் மூலம் நிரூபிப்பாரா என்ற கேள்வி சில ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும், அவரின் ஆட்டத்தை ஐ.பி.எல் தொடரில் பார்த்த பிறகே முடிவு செய்ய முடியும் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் முன்னனி வீரர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.