Representative Image.
IPL 2023 : இந்தியன் பிரீமியர் லீக் கடந்த முறை 74 நாட்கள் நடைபெற்ற நிலையில், பிசிசிஐ இந்தமுறை, ஐபிஎல் 2023ஐ 60 நாட்களில் முடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ இன்னும் தேதிகளை அறிவிக்கவில்லை என்றாலும், அது ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் மற்றும் இறுதிப் போட்டி மே 31 ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணி வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
ஐபிஎல் போட்டியை குறைந்த நாட்களில் முடிக்க காரணம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தான் எனக் கூறப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி (WTC 2023 Final) ஜூன் 7 ஆம் தேதி லார்ட்ஸில் தொடங்கும். ஐசிசி விதிகளின்படி, ஐசிசி நிகழ்வுக்கு ஏழு நாட்களுக்கு முன்னும் பின்னும் எந்தப் போட்டியும் நடத்தக்கூடாது.
மேலும் மகளிர் ஐபிஎல்லையும் 2023இல் (Women IPL 2023) பிசிசிஐ தொடங்க உள்ளது. இது மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், இந்த காரணங்களையெல்லாம் முன்னிட்டே 16வது ஐபிஎல் சீசனை பிசிசிஐ 60 நாட்களில் முடிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship 2023) புள்ளிகள் தரவரிசையில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.