ஐ.பி.எல் ஏலம் அசத்தலாக முடிந்ததைத் தொடர்ந்து ..! போட்டிகள் ஆரம்பிக்கும் தேதி வெளியானது..!

ஐ.பி.எல் தொடரின் 16-வது சீசன் 2023-ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில் அதற்கான மினி ஏலம் நேற்று அதிரடியாக நடந்து முடிந்தது, ஏலத்திற்கு முன்னதாகவே எதிர்பார்த்ததை போல் இங்கிலாந்து அணியின் வீரர்கள் அதிகவிலைக்கு விற்கப்பட்டார்கள்.
இங்கிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிகமான விலையாக 18.5 கோடி ரூபாவிற்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விற்கப்பட்டார்.அவரை தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்ககாக 16.25 கோடிக்கும் ,ஹாரி புரூக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 13.25 கோடி அதிகபடியான விலைக்கு விற்கப்பட்டர்கள்.அதேபோல் இந்திய வீரர்களில் அதிகமான விலையாக மயங்க அகர்வால் 8.25 கோடி ரூபாவிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விற்கப்பட்டார்.
ஐ.பி.எல் மினி ஏலம் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில்,தொடரில் பங்கேற்கும் 10-அணிகளுக்கும் பி.சி.சி.ஐ நிர்வாகம் சார்பில் 2023-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் தொடங்கும் தேதி குறித்த விவரங்கள் மெயில் மூலம் அனுப்பப்பட்டது.அந்த மெயிலில் ஐ.பி.எல் தொடர் கடந்த ஆண்டை போல் மார்ச் மாதத்தில் இல்லாமல் இந்த முறை ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதே வேளையில் கூடுதல் தகவலாகப் பெண்கள் கிரிக்கெட் அணிக்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் முதல் முறையாகப் பங்கேற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்டிக் பாண்டியா தலைமையில் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐ.பி.எல் ஏலம் முடிந்ததிலிருந்தே அடுத்து போட்டிகள் எப்போதும் தொடங்கும் என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையில் அதிகரித்துள்ளது.இந்த ஏலத்தில் அதிக விலைக்கு தங்கள் அணிக்காக வாங்கப்பட்ட வீரர்கள் எப்படி தொடரில் விளையாடப் போகிறார்கள் என்ற எண்ணமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.