IPL 2023 : ஷிகர் தவானுக்கு ஜாக்பாட்.. பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடி அறிவிப்பு..!!

IPL 2023 : இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல்) சீசனுக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் குழு கூட்டத்திற்குப் பிறகு, சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தி வரும் தவான் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸ் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 2022 இல் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் மட்டுமே. 2022 சீசன் தொடங்குவதற்கு முன்பு கே.எல்.ராகுல் வெளியேறியதை அடுத்து மயங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
மேலும் அனில் கும்ப்ளே தலைமைப் பயிற்சியாளராக இருந்த நிலையில் 2022 மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ், ரூ.8.25 கோடிக்கு தவானை வாங்கியது. சமீபகாலமாக நடந்த ஐபிஎல் போட்டிகளில் தவான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் அவர் 2020 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸுடன் 618 ரன்கள் எடுத்தார் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தனது முதல் சீசனில் 14 போட்டிகளில் அதிகபட்சமாக 460 ரன்கள் எடுத்தார்.
அதே சமயம் 2022 ஐபிஎல்லில் பஞ்சாப் அணி மிக மோசமாக தோல்வியடைந்து வெளிறிய நிலையில். முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள், சீசன் முடிந்த பிறகு மயங்கை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி வந்தனர். மேலும் பலர் சமீபத்தில் அவருக்கு பதிலாக தவானை மாற்றுமாறு பரிந்துரைத்தனர்.
2022 ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் காகிசோ ரபாடா, லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் போன்ற திறமை வாய்ந்த வீரர்களை கொண்டிருந்தாலும், மயங்கின் தலைமையின் கீழ் அணி நிலைத்தன்மைக்காக போராடியது. அவர் கேப்டன் பொறுப்பில் செயல்படத் தவறிவிட்டார்.
மயங்க் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். மேலும் தற்போதைய இந்திய அணியிலும் தனது இடத்தை இழந்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நவம்பர் 15 ஆம் தேதி வரை தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க உள்ளதால், வரவிருக்கும் ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் மயங்க் அகர்வாலை தக்கவைக்க முடிவு செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் மயங்கை 2022 சீசனில் தக்கவைத்துக்கொண்டபோது 12 கோடி ரூபாய் கொடுத்த நிலையில், இந்த முறை அணியிலிருந்து விடுவிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பஞ்சாப் கிங்ஸ் அணி வட்டாரங்களில் கூறப்படுகிறது.