IPL 2023 : டெல்லி கேப்பிடல்சிடமிருந்து பிரபல ஆல் ரவுண்டரை தூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 14, 2022 & 19:14 [IST]

Share

IPL 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏற்கனவே குஜராத் அணியிலிருந்து இரண்டு பேரை வாங்கியுள்ள நிலையில், தற்போது இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை டெல்லி கேபிடல்ஸ் அணியிடமிருந்து வாங்கியுள்ளது.

ஷர்துல் தாக்கூரை அவரது முன்னாள் ஐபிஎல் உரிமையான சென்னை சூப்பர் கிங்ஸ், தற்போதைய சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகியவையும் வாங்க போட்டியிட்டதாகக் கூறப்படும் நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முந்திக் கொண்டுள்ளது.

இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூருக்கு ஆறாவது ஐபிஎல் அணியாக மாறியுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் தவிர, ஷர்துல் தாக்கூர் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் இப்போது செயல்படாத ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

கடந்த சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை தாக்கூர் எடுத்தார். அதே சமயம் பேட்டிங்கில் 138 ஸ்ட்ரைக் ரேட்டில் 120 ரன்கள் எடுத்தார். 31 வயதான அவர் 75 போட்டிகளில் விளையாடி 9.06 என்ற எகானமியில் 82 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸிடமிருந்து லாக்கி ஃபெர்குசன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோரை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.