Representative Image.
IPL 2023 : ஐபிஎல் 2023 மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2023 ஏப்ரல்-ஜூன் காலத்தில் நடைபெற உள்ள நிலையில், ஏலம் டிசம்பரில் நடக்கும் என கூறப்பட்டது. இதற்காக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது.
இந்நிலையில், ஐபிஎல் மினி ஏலத்தை வெளிநாட்டில் அல்லது பெங்களூரில் நடத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இன்று வெளியான தகவலில் கொச்சியில் டிசம்பர் 23 ஆம் தேதி ஏலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் ஒரு அணிக்கான மொத்த பட்ஜெட் ரூ.90 கோடியில் இருந்து ரூ.95 கோடியாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பிப்ரவரியில், 2022 ஐபிஎல்லுக்கான ஒரு மெகா ஏலத்தை நடத்தியது. அப்போது 204 வீரர்கள் வாங்கப்பட்டனர். மொத்தம் ரூ.551.7 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதேபோல் 2023 ஐபிஎல்லுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் நடக்கும் எனக் கூறப்படும் நிலையில், டிசம்பரில் மினி ஏலத்தை நடத்தி முடிக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.