ஐ.பி.எல் 2023: பேரு தான் சென்னை சூப்பர் கிங்ஸ்.. ஆனால் ஒரு தமிழக வீரர் கூட இல்லை.. வருத்தத்தில் ரசிகர்கள்!!

IPL 2023 : ஐபில் தொடரின் 16-வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில், நேற்று நடந்த மினி ஏலத்தில் தொடரில் உள்ள 10-அணிகளும் பங்கேற்று தங்களுக்கு தேவையான வீரர்களைப் போட்டிப் போட்டு வாங்கினார்கள்.
ஐ.பி.எல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று கொச்சியில் நடந்த மினி ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு தங்கள் அணியில் தேவையாக இருந்த இடங்களுக்கு முன்னனி வீரர்களை வாங்கி அசத்தினார்கள்.
சி.எஸ்.கே அணி நேற்றைய ஏலத்தில் தங்களின் அணியில் காலியாக இருந்த இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களை நிரப்ப முதலில் முடிவு செய்து, இங்கிலாந்து நாட்டின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு வாங்கினார்கள்.
சி.எஸ்.கே அணியின் முன்னனி ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ அணியின் வீரரிலிருந்து பௌலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.அந்த இடத்தை இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் மிகவும் சிறப்பாக விளையாடி நிரப்புவார் என்பதில் ஐயமில்லை.
அதன்பின் மற்றோரு வெளிநாட்டு வீரருக்கான இடத்திற்கு நியூஸிலாந்து நாட்டின் பௌலர் கைல் ஜேமிசனை அடிப்படை விலையான 1-கோடி ரூபாவிற்கே வாங்கி அசத்தியது, சி.எஸ்.கே அணி கைல் ஜேமிசனை வாங்கியதன் மூலம் தங்களின் பௌலிங்கையும் மிகவும் வலுப்படுத்தியது.
சென்னை அணியில் ஒரு பேட்ஸ்மேனுக்கான இடம் இருந்ததால் அதனை நிரப்பும் நோக்கில் ஏலத்தில் செயல்பட்டு இந்திய அணியின் அனுபவ வீரர் அஜிங்க்யா ரஹானேவை அவரது அடிப்படை விலையான 50 லட்சத்திற்கு வாங்கியது. இதன் மூலம் சென்னை அணியின் ஓப்பனிங் மற்றும் மிடில் ஆர்டரில் களமிறங்க ஒரு வீரர் கிடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீரர்கள் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் பிக் என்று ரசிகர்கள் இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சென்னை அணியின் வருங்கால எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சிறந்த நான்கு இளம் இந்திய வீரர்களையும் வாங்கியுள்ளது .
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்:
வீரர் |
நாடு |
வகை |
வாங்கப்பட்ட விலை |
பென் ஸ்டோக்ஸ் |
இங்கிலாந்து |
ஆல்-ரவுண்டர் |
16.25 கோடி |
கைல் ஜேமிசன் |
நியூஸிலாந்து |
பௌலர் |
1 கோடி |
நிஷாந்த் சிந்து |
இந்தியா |
ஆல்-ரவுண்டர் |
60 லட்சம் |
அஜிங்க்யா ரஹானே |
இந்தியா |
பேட்ஸ்மேன் |
50 லட்சம் |
பகத் வர்மா |
இந்தியா |
ஆல்-ரவுண்டர் |
20 லட்சம் |
அஜய் மண்டல் |
இந்தியா |
ஆல்-ரவுண்டர் |
20 லட்சம் |
ஷேக் ரஷீத் |
இந்தியா |
பேட்ஸ்மேன் |
20 லட்சம் |
சி.எஸ்.கே அணியில் பல முன்னனி வீரர்கள் இடம்பெற்றுள்ள போதிலும் ஒரு தமிழக வீரர்கள் கூட இடம்பெறமால் இருப்பது சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.எஸ்.கே அணியின் ஹோம் கிரவுண்ட் சென்னை தான்,மேலும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தான் அணியின் ரசிகர்கள் அதிகமாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் விட்டுக்கொடுக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள், ஏலத்தில் சிறப்பாக பங்கேற்று அணிக்கு தேவையான வீரர்களை சிஎஸ்கே வாங்கியுள்ளது என்றும், வரும் ஐ.பி.எல் தொடரில் அதிரடியாக விளையாடி கோப்பையை கைப்பற்றும் என்றும் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.