ஐ.பி.எல் 2023: சாம் கர்ரன் கிடைக்கலான என்ன.. பென் ஸ்டோக்ஸ் வந்தாச்சு.. உற்சாகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 23, 2022 & 17:56 [IST]

Share

ஐ.பி.எல் தொடரில் உள்ள அணிகளிடத்தில் பொதுவாகவே ஆல்ரவுண்டர்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் வாங்க அணிகள் போட்டிபோட்ட நிலையில் 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தட்டிச் சென்றது.

இங்கிலாந்து அணி நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை பெற்றதால்,அந்த அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு ஐ.பி.எல் மினி ஏலத்தில் அமோக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. மேலும் இங்கிலாந்து அணியின் பேர் போன முக்கிய ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்த ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூர் அணிகள் அவரை வாங்க போட்டி போட்டார்கள். அடுத்ததாக ஹைதெராபாத் மற்றும் லக்னோ அணிகள்   களத்தில் இறங்கி போட்டிபோட்டார்கள். அதன்பின் இறுதியாக ஆட்டத்தில் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை வாங்கினார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்த முக்கிய ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ விடுவிக்கப்பட்டு அணியின் பௌலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த இடத்திற்கான மாற்று வீரரை அணி நிர்வாகம் ஏலத்தில் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதேபோல்  இங்கிலாந்து அணியின் அசத்தல் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை அணி வாங்கியது சென்னை ரசிகர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை   ஏற்படுத்தியது.

இந்த ஐ.பி.எல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்லவேண்டும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கபடும் நிலையில்,அதற்கு பக்கபலமாக பென் ஸ்டோக்ஸ் இருப்பார் என்பதில் ஐயமில்லை. மஞ்சள் நிற உடையில்  சென்னை அணிக்காக களமிறங்கும் பென் ஸ்டோக்ஸின் ஆட்டத்தை  காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.