மொத்தம் 405 பேருக்கு தான் வாய்ப்பு.. ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 15, 2022 & 11:39 [IST]

Share

IPL 2023 : ஐ.பி.எல் 2023 ஆண்டிற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23,2022-ஆம் தேதி கொச்சியில் மதியம் 2:30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்நிலையில், ஏலத்தில் பதிவு செய்திருந்த 991 வீரர்களை ஆய்வு செய்து மற்றும் ஐ.பி.எல் போட்டியில் உள்ள 10-அணிகளிடம் கலந்து ஆலோசித்தபின்  இறுதியாக 405 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பார்கள் என்று ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஏலத்தில் இறுதி முடிவாக மொத்தமாக 405 வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.ஏலத்தில் இடம் பெற்றுள்ள வீரர்களின் விரிவான விபரம் பின்வருமாறு :-  

1)இந்திய வீரர்கள் - 273

2)வெளிநாட்டு வீரர்கள் - 132 (4 வீரர்கள் ஐசிசியில் முழு உறுப்பினரல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள்) 

இந்த  405 வீரர்களில்,

தங்கள் நாட்டின் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் எண்ணிக்கை -119

தங்கள் நாட்டின் அணியில் இடம் பெறாத வீரர்கள் எண்ணிக்கை - 282

ஐசிசியில் முழு உறுப்பினரல்லாத நாடுகளைச் சேர்ந்த வீரர்கள்- 4

ஐ.பி.எல் போட்டியில் உள்ள 10-அணிகளில் மொத்தமாக 87 இடங்கள் காலியாக  உள்ளன. அதில் 30 இடங்கள் வெளிநாட்டு வீரர்களால்  நிரப்பப்படும்.

இந்த ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை பதிவு செய்துள்ள  19- வெளிநாட்டு வீரர்கள் பட்டியல்:

ரிலீ ரோசோவ்

கேன் வில்லியம்சன்

சாம் கர்ரன்

கேமரூன் கிரீன்

ஜேசன் ஹோல்டர்

பென் ஸ்டோக்ஸ்

டாம் பான்டன்

நிக்கோலஸ் பூரன்

ஃபில் சால்ட்

கிறிஸ் ஜோர்டான்

ஆடம் மில்னே

அடில் ரஷித்

டிராவிஸ் ஹெட்

ரஸ்ஸி வான் டெர் டுசென்

ஜிம்மி நீஷம்

கிறிஸ் லின்

ஜேமி ஓவர்டன்

கிரேக் ஓவர்டன்

டைமல் மில்ஸ்

 

மேலும் அடிப்படை விலையாக 1.5 கோடியை பதிவு செய்துள்ள 11-முன்னனி வீரர்கள் பட்டியல்:

ஜே ரிச்சர்ட்சன்

ஆடம் ஜம்பா

நாதன் கூல்டர்-நைல்

ஜேசன் ராய்

சீன் அபோட்

வில் ஜாக்ஸ்

டேவிட் மாலன்

ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்

ரிலே மெரிடித்

ஹாரி புரூக்

ஷகிப் அல் ஹசன்

 

இறுதியாக அடிப்படை விலையாக 1 கோடியை பதிவு செய்துள்ள 19-முன்னனி வீரர்கள் பட்டியல்:

மயங்க் அகர்வால்

மணீஷ் பாண்டே

ஜோ ரூட்

ஷாய் ஹோப்

கைல் ஜேமிசன்

ரோஸ்டன் சேஸ்

முகமது நபி

ஹென்ரிச் கிளாசென்

அகேல் ஹொசின்

டேவிட் வைஸ்

ரஹ்கீம் கார்ன்வால்

டேரில் மிட்செல்

டாம் லாதம்

முஜீப் ரஹ்மான்

லூக் வூட்

மோயஸ் ஹென்ரிக்ஸ்

மைக்கேல் பிரேஸ்வெல்

ஆண்ட்ரூ டை

தப்ரைஸ் ஷம்சி

 

இந்த ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளின் கையிருப்பில் உள்ள தொகைகள் ,அணியில் உள்ள வீரர்கள் மற்றும் அணியில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்களை பின்வரும் அட்டவணையில் காண்போம்.

அணிகள் 

வீரர்கள் எண்ணிக்கை

வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை

செலவு

செய்யப்பட்ட  தொகை

(கோடிகள்)

மீதம் இருக்கும் தொகை (கோடிகள்)

மொத்த

காலியிடங்கள்

வெளிநாட்டு வீரர்களுக்கான காலிடங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்

18

6

74.55

20.45

7

2

டெல்லி கேப்பிடல்ஸ்

20

6

75.55

19.45

5

2

குஜராத் டைட்டன்ஸ்

18

5

75.75

19.25

7

3

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

14

5

87.95

7.05

11

3

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

15

4

71.65

23.35

10

4

மும்பை இந்தியன்ஸ்

16

5

74.45

20.55

9

3

பஞ்சாப் கிங்ஸ்

16

5

62.8

32.2

9

3

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

18

6

86.25

8.75

7

2

ராஜஸ்தான் ராயல்ஸ்

16

4

81.8

13.2

9

4

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

12

4

52.75

42.25

13

4

மொத்தம்

163

50

743.5

206.5

87

30