IPL 2023 : தமிழக வீரரை கழட்டி விடும் குஜராத் டைட்டன்ஸ் அணி.. காரணம் என்ன?

Representative Image. Representative Image.

By Sekar Published: November 12, 2022 & 15:33 [IST]

Share

IPL 2023 : நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக மேத்யூ வேட், வருண் ஆரோன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் போன்றவர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் 2022 இல் புதிதாக நுழைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையில் தங்கள் முதல் முயற்சியிலேயே பட்டத்தை வென்று அனைவரையும் வியக்க வைத்தது. இப்போது, ​​​​அடுத்த சீசனிலும் தொடர் வெற்றியை கருத்தில் கொண்டு, குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களின் திட்டங்களுக்கு பொருந்தாத வீரர்களை விடுவிக்க எதிர்பார்க்கலாம்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வருண் ஆரோன், மாத்யூ வேட் மற்றும் விஜய் சங்கர் நீக்கம்?

வருண் ஆரோன் ஐபிஎல் போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் 33 வயதான வருண் ஆரோனை மிகப்பெரிய நம்பிக்கையுடன் குஜராத் அணி வாங்கியது. இருப்பினும், ஆரோன் சிறப்பாக பந்து வீசத் தவறினார். ஆரோன் விளையாடிய பல ஆட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அவர் 10.40 என்ற ஆபத்தான விகிதத்தில் ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இதற்கிடையே தயாள் மற்றும் சங்வான் ஆகியோர் சிறப்பாக செயல்படுவதால், ஆரோன் அணியில் இடம்பிடிப்பது கடினமாகத் தெரிகிறது. 

மறுபுறம் விஜய் சங்கர் டி20 சர்க்யூட்டில் அனுபவம் வாய்ந்தவர் ஆவார். ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் 115 போட்டிகளில் விளையாடி 124.58 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,733 ரன்களை எடுத்துள்ளார். பந்துவீச்சில் அவர் 8.22 என்ற எகானமியில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் குஜராத் அணி அவரை வாங்கியது.

ஆனால் அவர் குஜராத் அணியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படவில்லை. நான்கு போட்டிகளில், சங்கரால் 54.29 ஸ்ட்ரைக் ரேட்டில் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது மற்றும் பந்துவீச்சிலும் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர்-பேட்டர் மேத்யூ வேட் தனது தகுதியை நிரூபிக்க பல வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், அவர் டாப் ஆர்டரில் சிறப்பாக செயல்பட தவறியதால், ஐபிஎல் மினி-ஏலத்திற்கு முன்னதாக அவரும் விடுவிக்கப்படலாம்.

தக்கவைக்கப்படும் வீரர்கள் (எதிர்பார்ப்பு): ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ஷுப்மான் கில், அபினவ் மனோகர், விருத்திமான் சாஹா, ரஷித் கான், முகமது ஷமி, ராகுல் தெவாடியா, ரஹ்மானுல்லா குர்பாஸ்

விடுவிக்கப்படும் வீரர்கள் (எதிர்பார்ப்பு): மேத்யூ வேட், விஜய் சங்கர், குர்கீரத் மான் சிங், ஜெயந்த் யாதவ், சாய் கிஷோர், வருண் ஆரோன்.

இது தவிர ஃபெர்குசனை ஷிவம் மாவிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மாற்றிக்கொள்ள குஜராத் டைட்டன்ஸ் ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.