ஐ.பி.எல் 2023 மினி ஏலத்தில் சி.எஸ்.கே.வின் ஸ்கெட்ச் இந்த இரண்டு முக்கிய வீரர்களுக்கு தான்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 09, 2022 & 17:50 [IST]

Share

ஐ.பி.எல் 2023 தொடருக்காக தங்கள் அணிகளில் இருக்கும் இடங்களை நிரப்ப புதிய வீரர்களை எடுப்பதற்கான மினி ஏலம் கொச்சியில்  டிசம்பர் 23 2022 நடக்கவுள்ளது அனைவரும் அறிந்த செய்தி தான்.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் அணியில் உள்ள சில இடங்களை நிரப்ப இரு முக்கிய வீரர்களை வாங்குவதில் முனைப்பாக உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகின்றன. மேலும் ஐ.பி.எல் 2023 தொடரில்  தங்கள் அணியின் சார்பில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலையும் தங்கள் அணியிலிருந்து விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியலையும் அனைத்து அணிகளும் வெளியிட்டன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக இருந்த வீரர் டுவைன் பிராவோஅணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தாக  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  இந்த மினி ஏலத்தில் பஞ்சாப் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வாலை வாங்கும் எண்ணத்தில் இருப்பதாக அறியப்படுகிறது.

சென்னை அணியின் முன்னனி வீரராக இருந்த பாப் டு பிளெசிஸ் கடந்த ஆண்டு ஏலத்தில் பெங்களூர் அணி சார்பில் வாங்கப்பட்டார். இதனால் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்லும் வல்லமை உள்ள மயங்க் அகர்வாலை வாங்கினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குப் பக்கபலமாக இருப்பார் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.  

இரண்டாவதாகச் சென்னை அணி வாங்கும் எண்ணத்தில் இருக்கும் வீரர் கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் பவர் ஹிட்டராக விளங்கிய மேற்கிந்திய தீவுகள் நாட்டை  சேர்ந்த நிக்கோலஸ் பூரன் தான். இவர் தனது அசாத்திய ஆட்டத்தின் மூலம் ஒரு போட்டியின் போக்கையே மாற்றும் திறன் கொண்ட வீரர். குறிப்பாக பினிஷிங் ரோலில் சிறப்பாகப் பயன்படுவார். கூடுதலாக இவர் ஒரு விக்கெட்-கீப்பரும் ஆவார். 

தோனி ஐபிஎல் 2023 தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் எனக் கூறப்படும் நிலையில், அடுத்து ஒரு வலுவான விக்கெட் கீப்பர் வேண்டும் என்பதால், இவரை வாங்குவதில் சென்னை அணி உறுதியாக இருப்பதாக அறியப்படுகிறது.