ஐபிஎல் 2023 : மினி ஏலத்தை மிஸ் செய்யும் சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர்கள்..! ஐ.பி.எல் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு..!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 19, 2022 & 15:35 [IST]

Share

ஐ.பி.எல் தொடரின் 16-வது சீசன் வரும் 2023-ஆம் ஆண்டு நடக்கவுள்ளது. அதற்கு முன்பு தொடரில் பங்கேற்க உள்ள அணிகளில் இருக்கும் காலியிடங்களை நிரப்பும் வகையில் வரும் டிசம்பர்-23 ஆம் தேதி ஐ.பி.எல் மினி ஏலம் கொச்சியில் நடக்கவுள்ளது.

இந்த ஏலத்தில் தொடரில் உள்ள 10-அணிகளும் தங்களின் அணியின் பயிற்சியாளர்கள் உடன் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சி.எஸ்.கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி சமீபத்தில் தனியார் ஊடகத்துறைக்கு அளித்த பேட்டியில் தங்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் உட்பட அனைத்து பயிற்சியாளர்களுக்கு ஏலத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார்.

ஒரு அணி ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்கும் பொழுது அந்த அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்களும் அனைவரும் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில் சி.எஸ்.கே அணியின்,

தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்

பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி

பௌலிங் பயிற்சியாளர் டுவைன் பிராவோ

உதவி பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் 

ஆகிய அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் நாளை மகிழ்வாகக் கொண்டாடவேண்டும் என்பதால், இந்த மினி ஏலத்தில் நேரடியாகக்  கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சி.எஸ்.கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார். 

மேலும் சி.எஸ்.கே அணி போல் பல அணிகளின் பயிற்சியளார்களும் வரும் ஏலத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் பயிற்சியாளர் பிரையன் லாரா உள்ளிட்ட பலர் நேரடியாக கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அணிகளின் கோரிக்கையை ஏற்று புதிய முறையில் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்க ஐ.பி.எல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதுவரை தொலைபேசியின் மூலம் மட்டும் தான் ஏலத்தில் பங்கேற்காத நபர்களுடன் ஏலத்தின் போது அணி நிர்வாகிகள் தொடர்பு கொண்டு ஆலோசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல் முறையாக இப்போது இருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வீடியோ கான்பரன்சிங்  மூலம் பயிற்சியாளர்கள் ஏலத்தில் பங்கேற்கலாம் என்று ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிய வருகிறது.

ஐ.பி.எல் 2023 தொடர் ஆரம்பிக்க  இன்னும் பல நாட்கள் இருக்கும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் அணிகளில் எந்த புதிய வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த மினி ஏலத்தை முக்கிய ஒன்றாக எண்ணிக்  காத்திருக்கின்றனர்.