ஐ.பி.எல் 2023: ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டருக்கு அடித்த லக்..! பலகோடிகள் கொடுத்து வாங்கிய மும்பை அணி ..!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 23, 2022 & 19:42 [IST]

Share

ஆஸ்திரேலியாவின் இளம் ஆல்ரவுண்டரான  கேமரூன் கிரீன் தனது முதல் ஐ.பி.எல் தொடரில் 2023-ஆம்  பங்கேற்கவுள்ள நிலையில்  17.5 கோடி ரூபாவிற்கு ஐ.பி.எல் மினி ஏலத்தில்  மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

ஆஸ்திரேலியா அணி சார்பில்  கேமரூன் கிரீன் சர்வதேச டி-20 போட்டியில் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான  போட்டியில் விளையாடினார். ஒரு பௌலிங் ஆல்ரவுண்டரான கிரீன் முக்கிய தருணங்களில் தனது அசத்தலான பந்து வீச்சால் அணியின் வெற்றிக்கு உதவி உள்ளார். மேலும் பேட்டிங்கில் முன்னதாகவே களமிறங்கி அதிரடியான பேட்டிங்கையும் வெளிப்படும் திறன் கொண்டவர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய ஆல்ரவுண்டராக கலக்கி வந்த கீரன் பொல்லார்ட் இந்த முறை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த இடத்தை நிரப்ப மும்பை அணிக்கு ஒரு வீரர் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக ஏலத்தில் போட்டிபோட்டு இளம் வீரரான கேமரூன் கிரீனை வாங்கியுள்ளார்கள் என்று தெரிகிறது.

மும்பை அணியின் பயிற்சியாளராக உள்ள பொல்லார்ட் அவர்களின் மேற்பார்வையில் கண்டிப்பாக கேமரூன் கிரீன் முன்னனி ஆல்ரவுண்டராக செயல்பட்டு மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார் என்று அணியின் ரசிகர்களால் நம்பப்படுகிறது.

இதுவரை சர்வதேச டி-20 போட்டிகளில் கேமரூன் கிரீனின் பங்களிப்பு :

போட்டிகள்       : 8

ரன்கள்               : 139

அதிக ரன்          : 61

ஸ்ட்ரைக் ரேட்  : 173.75

விக்கெட்ஸ்       : 5

எகானமி            :8.9

கடந்த வருடம் நடந்த ஐ.பி.எல் தொடரில் மோசமான நிலையில் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் அணி,இந்த முறை தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.