ஆர்சிபியில் இருந்து 5 முக்கிய வீரர்கள் விடுவிப்பு...ரசிகர்கள் ஷாக்...இதோ தக்கவைத்த வீரர்கள் பட்டியல்!

Representative Image. Representative Image.

By Priyanka Hochumin Published: November 16, 2022 & 14:15 [IST]

Share

IPL Auction 2023: இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட். அதிலையும் அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவது ஐபிஎல் தான். எனவே, அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க அனைத்து அணிகளும் தங்களின்  வீரர்கள் பட்டியலை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ஆர்சிபி அணியில் எந்தெந்த வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

என்ன தான் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெற்றி பெறவில்லை என்றால் ஆர்சிபி அணிக்கு என்ற தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த அணியை தற்போது டூப்ளசிஸ் வழிநடத்தி வருகிறார். இந்த அணியில் டூப்ளசிஸ், விராட் கோலி, சுயாஸ் பிரபுதேசாய், ராஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், க்ளென் மேக்ஸ்வெல், வானிண்டு ஹசரங்கா, சபாஷ் அகமது, ஹர்ஷல் பட்டேல், டேவிட் வில்லி, கார்ன் ஷர்மா, மஹிபால் லோம்ரார், முகமது சிராஜ், கார்ன் ஷர்மா, மஹிபால் லாம்ரார், முகமது சிராஜ், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களைத் தவிர்த்து ஜேசன் பெஹண்டார்ஃப், அனீஸ்வர் கௌதம், சாமா மிலிண்ட், லுவ்னித் சிஸோடியா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் என மொத்தம் 5 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மெகா ஏலத்தின் போது பெங்களூரு அணி மொத்தமாக ரூ.88.45 கோடிக்கு வீரர்களை ஏலம் எடுத்திருந்தது. மீதம் ரூ.1.55 கோடியை கையில் வைத்திருந்தனர். தற்போது 5 வீரர்களை விடுவித்துள்ளதால் அந்த அணியின் பர்ஸ் தொகை ரூ.8.75 கோடியை கையில் வைத்துள்ளது.