ஐ.பி.எல் 2023 தொடருக்கான ஏலத்தில் பங்கேற்கும் அணிகளின் கையிருப்பில் உள்ள வீரர்கள், தொகைகள் குறித்த விவரங்கள்..!

Representative Image. Representative Image.

By Editorial Desk Published: December 14, 2022 & 19:00 [IST]

Share

ஐ.பி.எல் தொடருக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் இந்திய அளவில் மற்றும் உலகளவிலும் உள்ளது என்பது உண்மை. மேலும் அடுத்த ஆண்டில் நடக்க உள்ள ஐ.பி.எல் தொடரின் 16-வது சீசன் குறித்த செய்திகளை இப்போது இருந்தே ரசிகர்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளார்கள். இந்நிலையில் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடக்கவுள்ள ஐ.பி.எல் போட்டியின் மினி ஏலம் குறித்த விவரங்களைப் பற்றிக் காண்போம்.

ஐ.பி.எல் 2023 ஆண்டிற்கான தொடரில் கலந்துகொள்ளும் முன் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் காலியாக உள்ள சில இடங்களை புதிய வீரர்களின் நிரப்புவதற்கான மினி ஏலம் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் கலந்துகொள்ள 991 வீரர்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒவ்வொரு அணிகளின் தேவையான இடங்களை நிரப்பும் தகுதியுடைய வீரர்களை மட்டும் தான் அணிகள் வாங்க முற்படுவார்கள். இந்நிலையில் இந்த ஐ.பி.எல் தொடரில் உள்ள அணிகள் மற்றும் அந்த அணிகளிடம் இருக்கும் தொகைகள், வீரர்கள் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

1.சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல்  தொடரில் முக்கிய அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு தங்கள் அணியிலிருந்த முன்னனி வீரர்களை விடுவித்துள்ளது. ஒரு புதிய இளம் அணியை உருவாக்கும் விதமாக இந்த முயற்சி என்றும் கூறலாம்.

அணியில் இடம்பெற்றுள்ள மொத்த  வீரர்கள் எண்ணிக்கை : 18

அணியில் இடம்பெற்றுள்ள  வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை : 6

சி.எஸ்.கே அணியால் செலவு செய்யப்பட்ட தொகை: 74.55 கோடி 

சி.எஸ்.கே அணியிடம் கையிருப்பு உள்ள தொகை : 20.45 கோடி

அணியில் மீதம் உள்ள இடங்களின் எண்ணிக்கை :  7 (5+2 [வெளிநாட்டு வீரர்கள்])

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பட்டியல்

                                                          இந்திய வீரர்கள்

எம்.எஸ் .தோனி (கேப்டன்)

துஷார் தேஷ்பாண்டே

சுப்ரான்ஷு சேனாபதி

ஷிவம் துபே

சிமர்ஜீத் சிங்

முகேஷ் சௌத்ரி

அம்பதி ராயுடு

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்

தீபக் சாஹர்

ரவீந்திர ஜடேஜா

ருதுராஜ் கெய்க்வாட்

பிரசாந்த் சோலங்கி

 

                                                    வெளிநாட்டு வீரர்கள் 

மிட்செல் சான்ட்னர்

மொயின் அலி

டெவோன் கான்வே

மகேஷ் தீக்ஷனா 

டுவைன் பிரிட்டோரியஸ்

மதீஷ பத்திரன

2.மும்பை இந்தியன்ஸ் அணி

ஐ.பி.எல்  தொடரில் இதுவரை அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி குறித்த விவரம்:

மும்பை அணியில் இடம்பெற்றுள்ள மொத்த  வீரர்கள் எண்ணிக்கை : 16

மும்பை அணியில் இடம்பெற்றுள்ள  வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை : 5

மும்பை  அணியால் செலவு செய்யப்பட்ட தொகை: 74.45 கோடி 

மும்பை  அணியிடம் கையிருப்பு உள்ள தொகை : 20.55 கோடி

மும்பை அணியில் மீதம் உள்ள இடங்களின் எண்ணிக்கை :  9 (6+ 3[வெளிநாட்டு வீரர்கள்] )  

மும்பை இந்தியன்ஸ் அணி இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்

                                                 இந்திய வீரர்கள்

ரோஹித் சர்மா (கேப்டன்)

திலக் வர்மா

சூர்யகுமார் யாதவ்

இஷான் கிஷன்

ஜஸ்பிரிட் பும்ரா

குமார் கார்த்திகேயா

அர்ஜுன் டெண்டுல்கர்

ஹிருத்திக் ஷோக்கீன்

ஆகாஷ் மத்வால்

அர்ஷத் கான்

ராமன்தீப் சிங்

 

                                            வெளிநாட்டு வீரர்கள் 

டிம் டேவிட்

ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

டெவால்ட் ப்ரீவிஸ்

டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

ஜோஃப்ரா ஆர்ச்சர்

 

3.டெல்லி கேப்பிடல்ஸ்  அணி

இந்த வரிசையில் அடுத்தாக வரும் டெல்லி கேப்பிடல்ஸ் கடந்த  ஐ.பி.எல் தொடர்களில்  இளம் வீரர்களை கொண்ட அணியாக இருந்து பல போட்டிகளில் மிரட்டலாக விளையாடி அனைத்து அணிகளுக்கும் சவால் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

டெல்லி  அணியில் இடம்பெற்றுள்ள மொத்த  வீரர்கள் எண்ணிக்கை : 20

டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள  வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை : 6

டெல்லி  அணியால் செலவு செய்யப்பட்ட தொகை: 75.55 கோடி 

டெல்லி  அணியிடம் கையிருப்பு உள்ள தொகை : 19.45கோடி

டெல்லி அணியில் மீதம் உள்ள இடங்களின் எண்ணிக்கை :  5 (3+ 2[வெளிநாட்டு வீரர்கள்] )  

டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்

                                                     இந்திய வீரர்கள்

ரிஷப் பந்த் (கேப்டன்)

சேத்தன் சகாரியா

பிருத்வி ஷா

அக்சர் படேல்

சர்பராஸ் கான்

லலித் யாதவ்

யாஷ் துல்

குல்தீப் யாதவ்

கமலேஷ் நாகர்கோடி

கலீல் அகமது

பிரவீன் துபே

அமன் கான்

விக்கி ஓஸ்ட்வால்

ரிபால் பட்டேல்


                                          வெளிநாட்டு வீரர்கள் 

ரோவ்மன் பவல்

முஸ்தாபிசுர் ரஹ்மான்

மிட்செல் மார்ஷ்

டேவிட் வார்னர்

லுங்கி நிகிடி

அன்ரிச் நார்ட்ஜே


4.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி :

இதுவரை நடந்த ஐ.பி.எல் தொடர்களில் 2-முறை சாம்பியன் பட்டங்களை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி, அடுத்து வரும்  ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் அணியை தயார் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள மொத்த  வீரர்கள் எண்ணிக்கை : 14

கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள  வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை : 5

கொல்கத்தா   அணியால் செலவு செய்யப்பட்ட தொகை:87.95 கோடி 

கொல்கத்தா  அணியிடம் கையிருப்பு உள்ள தொகை : 7.05  கோடி

கொல்கத்தா  அணியில் மீதம் உள்ள இடங்களின் எண்ணிக்கை : 11 (8+ 3[வெளிநாட்டு வீரர்கள்])

கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்

                                             இந்திய வீரர்கள்

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்)

நிதிஷ் ராணா

வெங்கடேஷ் ஐயர்

ஷர்துல் தாக்கூர்

உமேஷ் யாதவ்

வருண் சக்ரவர்த்தி

அனுகுல் ராய்

ரின்கு சிங்

ஹர்ஷித் ராணா


வெளிநாட்டு வீரர்கள் 

ரஹ்மானுல்லா குர்பாஸ்

ஆண்ட்ரே ரஸ்ஸல்

சுனில் நரைன்

லாக்கி பெர்குசன்

டிம் சவுத்தி

 

5..பஞ்சாப் கிங்ஸ் அணி

இதுவரை நடந்த ஐ.பி.எல் தொடர்களில் ஒருமுறை கூட பஞ்சாப் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்லாத நிலையிலும் பல ஐ.பி.எல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள மொத்த  வீரர்கள் எண்ணிக்கை : 16

பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள  வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை : 5

பஞ்சாப்   அணியால் செலவு செய்யப்பட்ட தொகை:62.8 கோடி 

பஞ்சாப்  அணியிடம் கையிருப்பு உள்ள தொகை : 32.2 கோடி

பஞ்சாப்  அணியில் மீதம் உள்ள இடங்களின் எண்ணிக்கை :9 (6+ 3[வெளிநாட்டு வீரர்கள்] )  

பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்

                                                 இந்திய வீரர்கள் 

ஷிகர் தவான் (கேப்டன்)

அர்ஷ்தீப் சிங்

ஹர்ப்ரீத் ப்ரார்

ரிஷி தவான்

பால்தேஜ் சிங்

ஜிதேஷ் சர்மா

ராஜ் பாவா

பிரப்சிம்ரன் சிங்

அதர்வா டைடே

ஷாருக் கான்

ராகுல் சாஹர்

 


                                                     வெளிநாட்டு வீரர்கள் 

ஜானி பேர்ஸ்டோவ்

பானுகா ராஜபக்சே

லியாம் லிவிங்ஸ்டோன்

நாதன் எல்லிஸ்

ககிசோ ரபாடா

 

6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐ.பி.எல் தொடர்களில் ஒருமுறை கூட சாம்பியன்பட்டத்தை வெல்லவில்லை,ஆனால் தனது நேர்த்தியான ஆட்டத்தால் இந்த ஐ.பி.எல் தொடரில் பல முக்கிய சாதனைகளை செய்துள்ளதால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

பெங்களூர்  அணியில் இடம்பெற்றுள்ள மொத்த  வீரர்கள் எண்ணிக்கை : 18

பெங்களூர்  அணியில் இடம்பெற்றுள்ள  வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை : 6

பெங்களூர்    அணியால் செலவு செய்யப்பட்ட தொகை:86.25 கோடி 

பெங்களூர்  அணியிடம் கையிருப்பு உள்ள தொகை : 8.75 கோடி

பெங்களூர்   அணியில் மீதம் உள்ள இடங்களின் எண்ணிக்கை :7 (5+ 2[வெளிநாட்டு வீரர்கள்] )  

பெங்களூர்  அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்

                                                    இந்திய வீரர்கள் 

 

சுயாஷ் பிரபுதேசாய்

ஷாபாஸ் அகமது

மொஹம்மது சிராஜ்

விராட் கோலி

ஹர்ஷல் படேல்

சித்தார்த் கவுல்

ரஜத் படிதார்

கர்ன் ஷர்மா

ஆகாஷ் தீப்

தினேஷ் கார்த்திக்

மஹிபால் லோம்ர

அனுஜ் ராவத்

 

                                             வெளிநாட்டு வீரர்கள்

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்)

ஃபின் ஆலன்

வனிந்து ஹசரங்கா

டேவிட் வில்லி

ஜோஷ்  ஹேசில்வுட்

கிளென் மேக்ஸ்வெல்

 

7.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் இந்த ஐ.பி.எல் தொடர் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு ஆரம்ப காரணம் என்று கூறினால் மிகையில்லை. ஏனென்றால் முதல் ஐ.பி.எல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதன் பிறகு இதுவரை எந்த தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள மொத்த  வீரர்கள் எண்ணிக்கை : 16

ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை : 4

ராஜஸ்தான்     அணியால் செலவு செய்யப்பட்ட தொகை:81.8  கோடி 

ராஜஸ்தான் அணியிடம் கையிருப்பு உள்ள தொகை :  13.2  கோடி

ராஜஸ்தான் அணியில் மீதம் உள்ள இடங்களின் எண்ணிக்கை :9(5+ 4[வெளிநாட்டு வீரர்கள்] )  

ராஜஸ்தான்   அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் :

                                                     இந்திய வீரர்கள்

சஞ்சு சாம்சன் (கேப்டன்)

நவ்தீப் சைனி

துருவ் ஜூரல்

பிரசித் கிருஷ்ணா

யுஸ்வேந்திர சாஹல்

ரியான் பராக்

ஆர் அஷ்வின்

தேவ்தத் படிக்கல்

குல்தீப் யாதவ்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

குல்தீப் சென்

கே.சி கரியப்பா

 

                                            வெளிநாட்டு வீரர்கள்

ஷிம்ரோன் ஹெட்மியர்

ஜோஸ் பட்லர்

டிரெண்ட் போல்ட்

ஓபேட் மெக்காய்

 

8.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

இந்த ஐ.பி.எல் தொடரில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016-ஆம் ஆண்டு தனது முதல் ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் ஹைதராபாத் அணி இந்த முறை சாம்பியன்  பட்டத்தை வெல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதை அறிய முடிகிறது. அதற்கு அடித்தளம் போடும் விதமாக வரும் ஐ.பி.எல் மினி ஏலத்தில் பல புதிய வீரர்களை வாங்க உள்ளது.

ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள மொத்த  வீரர்கள் எண்ணிக்கை : 12

ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை: 4 

ஹைதராபாத்   அணியால் செலவு செய்யப்பட்ட தொகை: 52.75 கோடி

ஹைதராபாத் அணியிடம் கையிருப்பு உள்ள தொகை :  42.25கோடி

ஹைதராபாத் அணியில் மீதம் உள்ள இடங்களின் எண்ணிக்கை :13(9+ 4[வெளிநாட்டு வீரர்கள்])  

ஹைதராபாத்   அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் :

                                                        இந்திய வீரர்கள்

அப்துல் சமத்

அபிஷேக் சர்மா

கார்த்திக் தியாகி

டி நடராஜன்

ராகுல் திரிபாதி

வாஷிங்டன் சுந்தர்

புவனேஷ்வர் குமார்

உம்ரான் மாலிக்

 

                                          வெளிநாட்டு வீரர்கள்

ஐடன் மார்க்ரம்

க்ளென் பிலிப்ஸ்

மார்கோ ஜான்சன்

ஃபசல்ஹாக் ஃபரூக்கி

 

9.குஜராத் டைட்டன்ஸ் அணி

ஐ.பி.எல் தொடரில்  கடந்த வருடம் புதியதாக சேர்க்கப்பட்ட இரு அணிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஒன்று, ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத்  அணி  தங்கள் முதல் ஐ.பி.எல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள மொத்த  வீரர்கள் எண்ணிக்கை : 18

குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை : 5

குஜராத்  அணியால் செலவு செய்யப்பட்ட தொகை: 75.75  கோடி 

குஜராத் அணியிடம் கையிருப்பு உள்ள தொகை : 19.25 கோடி

குஜராத் அணியில் மீதம் உள்ள இடங்களின் எண்ணிக்கை :7(4+ 3[வெளிநாட்டு வீரர்கள்] )  

குஜராத் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்

                                                 இந்திய வீரர்கள்

ஹர்திக் பாண்டியா (கேப்டன்)

ராகுல் தெவாடியா

தர்ஷன் நல்கண்டே

விருத்திமான் சாஹா

பிரதீப் சங்வான்

சாய் சுதர்சன்

யாஷ் தயாள்

அபினவ் மனோகர்

முகமது ஷமி

ஷுப்மன் கில்

விஜய் சங்கர்

ஜெயந்த் யாதவ்

ஆர் சாய் கிஷோர்


                                         வெளிநாட்டு வீரர்கள்

டேவிட் மில்லர்

மேத்யூ வேட்

ரஷித் கான்

அல்சாரி ஜோசப்

நூர் அகமது

 

10.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி

ஐ.பி.எல் தொடரில்  கடந்த வருடம் புதியதாக சேர்க்கப்பட்ட  அணிகளில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முதல் தொடரிலேயே சிறந்த பங்களிப்பை அளித்தது. மேலும் வரும்  ஐ.பி.எல் 2023 தொடரில் லக்னோ அணியின் நிலவரம் குறித்து காண்போம்.

லக்னோ அணியில் இடம்பெற்றுள்ள மொத்த  வீரர்கள் எண்ணிக்கை : 15

லக்னோ அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கை : 4

லக்னோ  அணியால் செலவு செய்யப்பட்ட தொகை:  71.65  கோடி 

லக்னோ அணியிடம் கையிருப்பு உள்ள தொகை : 23.35 கோடி

லக்னோ அணியில் மீதம் உள்ள இடங்களின் எண்ணிக்கை :10 (6+ 4[வெளிநாட்டு வீரர்கள்])  

லக்னோ அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்

                                                   இந்திய வீரர்கள்

கேஎல் ராகுல் (கேப்டன்)

மனன் வோஹ்ரா

தீபக் ஹூடா

அவேஷ் கான்

மயங்க் யாதவ்

கரண் ஷர்மா

ஆயுஷ் படோனி

கிருஷ்ணப்ப கவுதம்

க்ருனால் பாண்டியா

மொஹ்சின் கான்

ரவி பிஷ்னோய்

 


                                                   வெளிநாட்டு வீரர்கள்

குயின்டன் டி காக்

மார்கஸ் ஸ்டோனிஸ்

கைல் மேயர்ஸ்

மார்க் வூட்